அரசு ஆற்றுப்படை - 05 : கேள்விகளின் குழந்தைகள் !
Posted Date : 10:06 (04/06/2012)Last updated : 11:06 (05/06/2012)

-   தமிழ்மகன்

ரு வறட்சியான ஞாயிற்றுக்கிழமை. டி.வி. நிகழ்ச்சிகளில் மண்டை காய்ந்து போய் வீட்டில் இருந்த டி.வி.டி.களை தூசு தட்டினோம். அஜீத் நடித்த ‘காதல் கோட்டை’, விஜய் நடித்த ‘குஷி’ ஆகிய திரைப்படங்களைத் தேர்வு செய்தோம்..

இருவரும் சந்தித்துவிட மாட்டார்களா என்பதுதான் இரண்டு படங்களிலும் நாற்காலி நுனிக்குத் தள்ளிய கிளைமாக்ஸ். இப்போதும் எனக்கு அந்தப் பரபரப்பில் மூழ்கிப் போவதில் எந்தவித சுணக்கமும் இல்லை. அஜீத், விஜய் என்ற பேதமும் எனக்கு இல்லை.

சுமார் பத்தாண்டு இடைவெளியில் என் ரசனையில் எந்த மாற்றமும் இல்லாமல் அன்று பார்த்தது மாதிரியே ரசித்தேன்..

படங்களைப் பார்த்து முடிந்ததும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த உறவுக்காரின் பெண் ஒரு கேள்வி கேட்டாள். ‘‘ஏன் ரெண்டு படத்திலும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடியாம இவ்வளோ கஷ்டப்பட்றாங்க? செல்போன்ல ‘நான் இங்கத்தான் இருக்கேன்.. நீ எங்க இருக்கேனு கேக்க வேண்டியதுதானே?’’

அவள் இந்த பத்தாண்டுகளுக்குள் பிறந்தவள்.

நிறைய பேர் அந்தப் படத்தைப் பார்த்தாலும் குழந்தைக்குத்தான் அந்த சந்தேகத்தைக் கேட்க முடிந்தது.

அந்த படம் வந்த போது செல்போன் என்பது இங்கு இல்லை என சொன்னால், செல்போன் இல்லாம எப்படி இருந்தீங்க என ஆச்சர்யப்பட்டாள்.

குழந்தைகள் ‘மாத்தி யோசி’.. என்பதை இயல்பாக யோசிக்கின்றன.

"நிலாவில் ஆயா வடைசுட்டுக் கொண்டிருக்கிறாள்" என்றதும், "சுட்ட வடையை யாருக்கு விற்பாள்?"என்று குழந்தைகள் கேட்கின்றன.

‘‘முயலுக்கும் ஆமைக்கும் ரேஸ் வெச்சாங்களாம்.’’ இந்தக் கதையைச் சொன்னேன்.

தீவிர யோசனைக்குப் பிறகு நண்பரின் பையன் ஒரு கதையைச் சொன்னான்.

‘‘இந்த ரேஸ்ல ஒரு மிஸ்டேக் இருக்கு. முயல் ஃபாஸ்ட்டா ஓடும். ஆமை ஸ்லோவா போவும். இது ரெண்டுக்கும் யாராவது ரேஸ் வைப்பாங்களா? வேணும்னா முயலுக்கும் மானுக்கும் ரேஸ் வைக்கலாம்... எல்.கே.ஜி. படிக்கிறவனுக்கும் பிளஸ் டு படிக்கிறவருக்கும் எக்ஸாம் வெச்சா எப்படிப்பா..? முயலுக்கும் ஆமைக்கும் ரேஸ் வெச்சா ரெண்டுக்கும் ஈக்குவல் இம்பார்டன்ஸ் கொடுக்கணும்.. பாதி தூரம் ஓடிக் கடக்கணும். நடுவுல ஒரு ஆறு வரும். அதை நீந்திக் கடக்கணும்.. இந்த ரெண்டையும் கடந்து யார் மொதல்ல வர்றாங்களோ அவங்களுக்குத்தான் பர்ஸ்ட் பிரைஸ்.. இப்ப ஓ.கே.வா?’’

குழந்தைளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், பல சமயங்களில் நாம் விடையறியாத கேள்விகளின் குழந்தைகளாகிறோம்.

குழந்தைகள் சொல்லும் கதைகளும் அவர்கள் கேட்கும் சந்தேகங்களும் சுவாரஸ்யமானவை. நமது பள்ளிக்கூடங்கள் குழந்தைகளின் கதைளுக்குக் காது கொடுப்பதில்லை. அவர்களின் சந்தேகங்களுக்குக் காது கொடுப்பதில்லை.

மூட்டை மூட்டையாகப் புத்தகங்களைக் கொடுத்து அதை பத்து மாதங்களுக்குள் படித்து முடித்து 99 மார்க் எடுத்து பாஸ் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறோம்.

இதில் அரசுப் பள்ளிக்கூடம், மெட்ரிக் பள்ளிக்கூடம், சி.பி.எஸ்.ஸி. என்று விதம்விதமான புத்தகமூட்டைகள் வேறு. எல்லோருக்கும் சமமானதாகவும் சீரானதாகவும் ஒரு கல்வி அவசியம். அதை யார் உருவாக்கினாலும் சரி.

சென்ற அத்தியாயம் : அரசு ஆற்றுப்படை - 4 : கால்சூட்டைத் தணிக்க கைக்குழந்தை!

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
t kandavelu5 Months ago
குழந்தைகளின் கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னல் போதும் வரும் தலைமுறை நம்மை வாழ்த்தும்
marshall6 Months ago
nice
Sathish11 Months ago
It so gooooooooooooooooooooood....
krishnamoorthy11 Months ago
பிரச்சினை கேள்வியில் இல்லை.அவை யதார்த்தமானவை.

முயல் - ஆமை கதை நாமே புரிந்துகொள்ளாத போது நாம் எப்படி அவர்களுக்கு புரிய வைக்கப்போகிரோம்.

முயல்-முயற்சியில் மும்முரம் காட்டாத ஆனால் திறமையை தன்னிடதே கொண்டவரை குறிக்கும்.

அமை- திறமைகள் பல இல்லையெனிலும், முயற்சியியில் தளராத நபரை குறிக்கும்.முயற்சி திருவினையாக்கும்
Babu11 Months ago
semma matre ma ithu... :)
Angel tamil11 Months ago
Nice
Max11 Months ago
அருமை...அருமை....
dhavanees11 Months ago
sper இது நல்ல idea !@#$%
murugesan11 Months ago
super this is a good idea......... if it follow our nation will shine...
sundar11 Months ago
இது மாதிரி புலம்புவது ஃபாஷனாகி விட்டது. இந்த புலம்பலில் பெரும்பாலோர் தம் கடமையை மறந்து விட்டனர். பெற்று இரண்டரை வயதிலேயே பள்ளிக்கூடத்தில் விட்டதோடு பெற்றோரின் கடமை முடிந்து விட்டதாக நினைக்கின்றனர். ஆசிரியர், இரண்டாம் பெற்றோர் மட்டும்தான். முதல் பெற்றோர், இரண்டாம் பெற்றோர் வந்ததும் குழந்தையை பொறுத்த மட்டில் காணாமல் போய் விடுகின்றனர். சீரியல், ஸ்போர்ட்ஸ், அக்கப்போர், சமையல், வெளிவேலைகளோடு குழந்தைகளோடு நாம் செலவழிக்கும் 'க்வாலிடி டைம்'தான் அறிவாளிகளை உருவாக்குகிறது. குழந்தைகளோடு பேசுங்கள். பதில் கொடுங்கள். அனுபவியுங்கள்.
சந்திரா11 Months ago
எல்.கே.ஜி. படிக்கிறவனுக்கும் பிளஸ் டு படிக்கிறவருக்கும் எக்ஸாம் வெச்சா எப்படிப்பா..? 32 அமச்சச்சனுங்க கிட்ட ஒரு எதிர்கட்சி போட்டி போடுற மாதிரிதான்
Venkatesan11 Months ago
I thought when I was young 12 years old why this concept is given to kids very early age.Atleast we have to have this story in grade 5 or after to understand "Slow and Steady wins the race". Unfortunately it is taught in very early age.When kids ask logically question, Elders are unaware of learning path or understanding what age is appropriate.
vinod12 Months ago
எங்கள் தாத்தாவிடம் இதை படித்துக்காட்டினேன்...ஓ இப்பவும் இப்படித்தான் யோசிச்சிட்டிருக்காங்களா?? நான் குழந்தையா இருந்தப்ப கூட இதே மாதிரி தான் பேசிக்கிட்டிருந்தாங்க என சொல்லிச்சிரித்தார்.. ஒரு வேளை இதனால் தான் குழந்தையும், கிழவர்களும் ஒன்று என்றனரோ....?
r.chibi12 Months ago
பாரஞ்ஞ்
RadhaRangaraju12 Months ago
பதில் சொல்லும் ஆற்றலோ,அறிவோ அல்லது அக்கறையோ உள்ளவர்கள் தான் {பெற்றோராகட்டும்,ஆசிரியராகட்டும்} குழந்தைகளின் கேள்விகளை காது கொடுத்துக் கேட்பார்கள்......
தமிழ்மகன்12 Months ago
அன்பு மாதவன் புத்தகச் சுமை மட்டுமல்ல், கல்வியில் உள்ள ஏற்ற தாழ்வையும் சீராக்க வேண்டியிருக்கிறதே..
jseam12 Months ago
குழந்தைகள் சொல்லும் கதைகளும் அவர்கள் கேட்கும் சந்தேகங்களும் சுவாரஸ்யமானவை. நமது பள்ளிக்கூடங்கள் குழந்தைகளின் கதைளுக்குக் காது கொடுப்பதில்லை. அவர்களின் சந்தேகங்களுக்குக் காது கொடுப்பதில்லை.

- 100% சரியான கூற்று

இந்த காலத்திய ஆசிரியர்கள், மானவர்களின் அறிவுக்கண்ணை திறக்க முற்படவில்லை, மாற்றாக, பாடங்களை முடித்து, அவர்களை மார்க் எடுக்கும் இயந்திரங்களாக உருவாக்குகின்றனர்.
madhavan12 Months ago
அது தான் மூன்று பருவ பாடத்திட்டம் தொடங்கியாச்சே? பின் ஏன் இந்த கட்டுரை. சி பி எஸ் சியில் கூட கிரேடு சிஸ்டம் தானே?
Displaying 1 - 18 of 18