நிதித்துறை படிப்புகள் : ஃபெல்லோ சார்ட்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (FChFP - Fellow Chartered Financial Practitioner)
Posted Date : 16:02 (18/02/2012)Last updated : 17:02 (18/02/2012)

-வா.கார்த்திகேயன்.

நிதி ஆலோசனை சொல்லித் தர பல வகையான கோர்ஸ் இருக்கிறது. சர்டிபைட் ஃபைனான்ஸியல் பிளானர் (Certified Financial Planner ) என்ற கோர்ஸை சென்ற முறை பார்த்தோம். இப்போது ஃபெல்லோ சார்ட்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் என்ற கோர்ஸை பார்ப்போம்.

ஏற்கெனவே பார்த்த கோர்ஸுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம், இந்த படிப்பின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து நிதி ஆலோசகர் விவேக் கார்வாவிடம் கேட்டோம்.

அதற்கு அவர் அளித்த விளக்கம் இதோ :

ஏற்கெனவே பார்த்த கோர்ஸுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே நிதி ஆலோசகர்களுக்கான படிப்பு தான். சி.எஃப்.பி. (Certified Financial Planner ) நீண்ட நாட்களாக இருக்கிறது. இந்த் கோர்ஸ் 2007-ம் ஆண்டு தான் இந்தியாவில் துவங்கியது.

ஆசியா பசுபிக் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் அசோசியேஷன் என்ற சிங்கப்பூரை சேர்ந்த அமைப்பு இந்த கோர்ஸை 2001-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா, தைவான், மலேசியா, பிலிபைன்ஸ் உள்ளிட்ட 9 நாடுகளில் இந்த படிப்பு இருக்கிறது. மேலும் 12 நாடுகளில் இந்த படிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு காலம்?

இந்த கோர்ஸை முடிக்க ஆறு தேர்வுகளை எழுத வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த தேர்வை எழுதலாம். தொடர்ந்து முடிக்கும் பட்சத்தில் 18 மாதங்களில் இந்த கோர்ஸை முடிக்கலாம். முதல் ஐந்து தேர்வுகள் அப்ஜெக்டிவ் டைப்பில் எழுத வேண்டி இருக்கும். கடைசி தேர்வு கேஸ் ஸ்டடியின் அடிப்படையில் இருக்கும்.

முதல் ஐந்து தேர்வுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் கடைசி தேர்வை மூன்று முறைக்குள் தேர்ச்சி பெற வேண்டும். ஒரு வேளை தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் முதலிருந்து தேர்வு எழுத வேண்டி இருக்கும்.

தேர்ச்சி பெற முதல் ஐந்து தேர்வுகளுக்கு 60 சதவிகிதமும் கடைசி தேர்வுக்கு 50 சதவிகித மதிப்பெண்ணும் தேவைப்படும். சிஎஃப்.பி தேர்வுகளை ஆன்லைன் மூலம் எழுதலாம். ஆனால் இந்த தேர்வினை ஆன்லைன் மூலம் எழுத முடியாது.

யார் எழுதலாம்?


இந்த தேர்வை எழுத 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பைனாஸியல் சர்வீசஸ் துறையில் 2 வருடங்கள் முழு நேர அனுபவம் இருக்க வேண்டும். அங்கீகரிக்ப்பட்ட கல்வி நிலையங்களில் படித்திருக்கும், டிகிரி முடித்திருக்கும் பட்சத்தில் அது ஒரு வருட அனுபவமாக கருதப்படுகிறது. ஆனால் மற்ற தேர்வுகள் (உதாரணத்துக்கு சி.எஃப்.பி) முதுகலை பட்டம் உள்ளிட்ட சில படிப்புகளை படித்திருக்கும் பட்சத்தில் நேரடியாக இறுதி தேர்வை எழுதலாம். ஆனால் இங்கு எந்த விதிவிலக்கும் இல்லை. அனைத்து தேர்வுகளை முழுமையாக எழுதியாக வேண்டும்.

தேவை?

உலகம் முழுக்க இந்த படிப்பை முடித்தவர்கள் 2000 நபர்களுக்குள் தான் இருக்கிறார்கள். இந்தியாவில் இதன் எண்ணிக்கை 50க்குள் தான் இருக்கும். வருங்காலத்தில் இந்தியாவில் நிதி ஆலோசகர்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதால் இப்படிப்பை முடித்தவர்களுக்கான வரவேற்பு அதிகமாக இருக்கும்.

இதன் தலைமை அலுவலகம் கோவையில் இருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு http://fchfp.lugi.org

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்