இப்படியுமா யோசிப்பார்கள்?!
Posted Date : 20:04 (05/04/2012)Last updated : 22:04 (05/04/2012)

- பானுமதி அருணாசலம்

"புதுக்கோட்டையில் இடைத்தேர்தல்
எம்.எல்.ஏ. முத்துக்குமரன் மரணம்"

இது எனக்கு செல்போனில் வந்த அதிர்ச்சி மெசேஜ்.

அடுத்து வந்த மெசேஜ் அதை விட அதிர்ச்சிகரமாக இருந்தது.

"அந்த தொகுதி மக்களுக்கு இனி பண மழை தான்.."

ஒரு மனிதனின் இறப்பை இப்படி பண வரவுடன் ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் மக்களிடம் வந்ததற்கு யார் காரணம்? அரசியல்வாதிகளா அல்லது பொதுமக்களா?

நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த சி.பி.ஐ.-க்கு புதுக்கோட்டை தொகுதி கிடைத்தது. தி.மு.க. சார்பில் பெரியண்ணன் அரசு போட்டியிட்டார். கடுமையான போட்டிக்கு இடையிலும் தனது எளிமையான பிரச்சாரம், மக்களிடம் அணுகும் முறை போன்ற காரணங்களால் மக்களிடம் வரவேற்பை பெற்றார் முத்துக்குமரன். பெரிய கட்சிகள் பணத்தை அள்ளித் தெளித்தாலும், தனது எளிமையால் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜெயித்தார்.

ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் தான் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் தனது தொகுதி மக்களுக்கு தேவையானதை பெற்றுத்தர முயற்சித்து வந்தார். சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் மக்கள் பிரச்னைகளுக்காக அதிகப்படியான கேள்விகளை கேட்ட உறுப்பினர் என்ற பெருமையை முத்துக்குமரன் பெற்றிருந்தார். இப்படி தனது அரசியல் வாழ்க்கை பிரகாசிக்க ஆரம்பித்த சில மாதங்களிலே அவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என கேள்விப்பட்ட போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இப்படிப்பட்ட நல்ல மனிதனின் இழப்பு அந்த தொகுதி மக்களுக்கு பேரிழப்பாகும். இவரது இறப்பால் வரப்போகும் இடைத்தேர்தலுக்கு எந்த கட்சிகள் எவ்வளவு கொடுக்கும் என்ற பேச்சுகள் அந்த தொகுதி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.

ஓட்டுக்கு காசு வாங்கும் மக்களின் இந்த மனோபாவத்திற்கு யார் காரணம்?

ஆளுங்கட்சி தனது வெற்றியை தக்க வைக்கவும், எதிர்கட்சி தங்களது இருப்பை உறுதிப்படுத்தவும், மற்ற கட்சிகள் தங்கள் வரவை பதிவு செய்யும் தளமாக இடைத்தேர்தலை பார்க்கின்றனர். இதனால் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில் அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி வெற்றி பெற போராடுகின்றன.

இதில் முக்கிய பங்கு வகிப்பது 'ஓட்டுக்கு பணம்'. எப்படியும் வீட்டுக்கு குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாயாவது கிடைத்துவிடும் என்ற கணக்கை போட ஆரம்பித்துவிடுகின்றனர் பொது மக்கள். இதில் யாரை குறை சொல்வது? பணம் கொடுப்பவரையா? பணம் வாங்குபவரையா? 

முத்துக்குமரன் இறப்பால் வரும் இடைத்தேர்தலுக்கு கிடைப்பது சில ஆயிரங்கள் தான், ஆனால் அவர் உயிருடன் இருந்தால் தனது தொகுதி மக்களுக்காக எத்தனை ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை பெற்றுத் தந்திருப்பார் என்பதை மக்கள் யோசித்து பார்த்தால் புரியும்.

இனிமேல் சட்டசபை எம்.எல்.ஏ.-கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் போலிருக்கிறது. தங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவேண்டும் என்பதற்காக தொகுதி மக்கள் எதையும் செய்வார்களோ என்று பயப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

மாறுமா இந்த கலாச்சாரம்?

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
RAMESH KUMAR.SU1 Years ago
மார்க்சிய புரட்சி மலர பாடுபடும் தோழர்களுக்கு பேரிழப்பு.
Thanmathi1 Years ago
ஒவ்வொரு மனித மனமும் சிந்தித்து செயல்பட வேன்டிய விஷயம்.
rajagopalan1 Years ago
ஆளும் கட்சி எதிர்க்குரல் ஏதுமில்லாது இருக்க விரும்புகின்றது. மீண்டும் சி.பி.ஐ. அனைத்துக் கட்சியினரது ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெறுவது இன்றைய தேவை. ஜனநாயகம் தழைக்க தேவை. ஆனால் சி.பி.ஐ. பின்வாங்கிவிட்டது.
சுகுமாரன்1 Years ago
இன்றைய அரசியல்வாதிகள் வாக்குகளை வாங்கி சென்றதோடு சரி.அதன் பின் தொகுதிக்கோ,மக்களுக்கோ எந்த வித நலனும் செய்வதில்லை.அதனால் மக்களிடையே அவர்கள் மீது எந்த விதமான பற்றோ பாசமோ வரவே வாய்ப்பில்லை.காமராஜர்,கக்கன் போன்றவர்களை இன்னும் நினைக்கும் மக்கள் இப்போதைய ச.ம.உறுப்பினர்கள் மீது அன்பு செலுத்த அவர்களின் செயல் பாடுகள்தான் காரணமாகிவிடுகிறது.இன்றைய நிலையில் நம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வராதா? அதனாலாவது தொகுதியின் குறைகள் நீங்காதா என்று நினைப்பவர்கள்தான் அதிகம்.அதற்கு ஆட்சியாளர்கள்தான் முக்கிய காரணம்.
saravan vijayan1 Years ago
இப்படிப்பட்ட ஈன மக்கள் இருக்குமிடத்தில் நல்லவனுக்கு என்ன வேலை அதுதான் கடவுள் முத்துக்குமரனை தன்னுடன் அழைத்துக்கொண்டார்..

லஞ்சம் வாங்குபவனை திட்டுகிறோம்..ஊழல் செய்பவனை திட்டுகிறோம்..இப்படி கெட்ட புத்தி உள்ள மக்களை என்ன வென்று திட்டுவது.

இறைவன் செய்வது தவறில்லை எனபது போல மக்கள் செய்யதும் தவறில் வராதோ..!
barkath1 Years ago
He is a great politician.I read about him in ANANTHA VIKATAN.
I was very happy with his simplicity.We really miss him.
I Pray to god he must go to HEAVEN.
sarah1 Years ago
ipavum ini vara pogum kalangalilum ivar mathiriyana oru nalla manithar vara povathillai... nallavangaluku tan sothanaikal ayiram varukirathu..... intha makkaluku evalavu tan uthavi panunalum panathin meethulla asai vidave vidathu poliruku intha nilai mara vendum
car1 Years ago
பனம் பாதாலம் வர்ரை பாயும் நு சும்ம வா சொன்னைங்க
bvimalnath1 Years ago
ஒரு தொகுதியில் எம் எல் ஏ அகாலமரனம் அடைந்தால் அந்த கட்சியின் நபர் ஒருவரையே அந்த தொகுதியின் உருப்பினராக நியமிக்கும்படியான திருத்தம் சட்டமாக்கப்படவேன்டும் பனச்செலவு காலவிரையம் இவையெல்லாம் தவிர்த்து மக்கல்ப்பிரச்சினைகல் தொய்வில்லாமல் சட்டசபையில் கேட்கப்பட்டு மக்கல் பயனடையவேன்டும்
thamaraiselven1 Years ago
அரசியல்வாதிகல் "அரசியல்" செயும் வரை இந்த நிலை மாரப்ப்போவதில்லை
Vicky1 Years ago
Nallavarkal arasiyaluku varuvathilai vanthaalum uyirodu irupathu ilai. . . .
Kovaiguru1 Years ago
"தங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல்(பணம்)வரவேண்டும் என்பதற்காக தொகுதி மக்கள் எதையும் செய்வார்க(ளோ)ள்."

"மாறுமா இந்த கலாச்சாரம்?" இதுதான் இப்போது கலாச்சாரம்!!!
abc1 Years ago
முத்துக்குமரன் போன்ற நல்லவர்கள் பலியாகமல் இருந்தால் இது ஒரு விதத்தில் நல்ல கலாசாரம் தான். ஒரு கட்டத்தில் மக்களுக்கு 'பயந்து' மோசமான அரசியல்வியாதிகள் தேர்தலில் நிற்க பயப்படுவார்கள்.
சித்திர குப்தன்1 Years ago
முதலாளித்துவ நாடுகளிலெல்லாம் இது தான் நிலைமை. நேரடியாகவோ மறைமுகமாகவோ, தேர்தல் ஒரு வியாபாரமாக ஆகிவிட்டது. அதற்கான சரியான மாற்று கம்யூனிசமும் இல்லை. இனி ஒரு புதிய முறையைச் சிந்தித்து புகுத்த அரசியல் வாதிகள் ஒப்புக் கொள்ள மாட்டர்.
senthilkumar1 Years ago
முதல்வர் புதுகோட்டைக்கு 50கோடி ஒதுக்கி இருக்கிரார். இதில் இருந்து என்ன தெரிகிரது
S.Thirupathi1 Years ago
யென்னப்பா இது! ஆவருக்கு வொட்டு பொட்டர்கல் இப்பொ அவர்கலைடயெ குட்ரம் சொல்வதி ந்க்யமில்லை
ananda1 Years ago
முத்துகுமரனை நாம் இழந்து நிற்கும் இந்த நிலையில் நாம் ஏற்கனவே இழந்திட்ட நேர்மை,கண்ணியம்,மனிதநேயம் போன்றவற்றை பற்றி இனி பேசி என்ன பயன்.
rm sg1 Years ago
நாடு நாசமாக போகிறதென்று இது ஓர் முன்னறிவிப்பு
Raj1 Years ago
This is normal.
Sreeram1 Years ago
பணம் வாங்கி ஓட்டுப் போடும் மக்களுக்கு எப்படி லஞ்சம் வாங்காத எம்.எல்.ஏ கிடைப்பார்கள்? மக்களுக்கேற்ற தலைவன் தான் கிடைப்பான்.
ashokha1 Years ago
முத்துக்குமரன் ஒரு நல்ல உழைப்பாளி. தொகுதிக்கு பல நன்மைகளை குறைந்த நாட்களிலேயே செய்தவர். இப்போது அவர் மறைவு வியாபரமாக கருதப்படுவதை பார்க்கும்போது மனம் வலிக்கிறது.
dev1 Years ago
இனிமேல் சட்டசபை எம்.எல்.ஏ.-கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் போலிருக்கிறது. தங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவேண்டும் என்பதற்காக தொகுதி மக்கள் எதையும் செய்வார்களோ என்று பயப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

Why should you keep quiet. Let them take their life, including ruling MLAs, once a month OR few a month to get rid of all, so that the corrupt black will go down from the politicians..
Raj1 Years ago
ஒவ்வொரு தொகுதிக்கும் 6 மாதத்துக்கு ஒரு முறை இடைதேர்தல் வர யாகம் நடத்தி ஆண்டவனை பிரார்த்திப்போம்
ashokkumar1 Years ago
எவ்வலவு மமொசமான மனனிலையை அரசிசியலில் உருவக்கிவிட்டார்கல் இந்த பாழப்பபொன அரசியல்வாதிகல்!
s viji1 Years ago
முத்துக்குமரன் ஜெயித்த இந்த சட்டசபை தேர்தலிலும் பணம் தரப்பட்டது அதனால் தான் ஓட்டு வித்யாசம் குறைந்தது. அதையும் மீறி அவர் வென்றார். எனவே எந்த கட்சியாக இருந்தாலும் கம்யூனிஸ்டுகளை எதிர்க்க வேன்டும் என்றால் முன்பை விட 2_3 மட௩கு செலவழிக்க வேன்டும்
 Displaying 1 - 25 of 33