
அது எப்படி..
ஒரே பூமியில்
தகிக்கும் எரிமலை
சில்லிடும் பனிமலை
அது எப்படி..
ஒரே நாளில்
சூரியன் கொளுத்தும் நண்பகல்
நிலவு சில்லிடும் நள்ளிரவு
அது எப்படி..
ஒரே நாட்டில்
பிச்சை எடுக்கும் அம்போனி
பணம் படைத்த அம்பானி
அது எப்படி..
ஒரே கடலில்
சலசலக்கும் கரையோர அலையோசை
மெளனம் பாவிக்கும் ஆழ்கடல் அமைதி
அது எப்படி...
ஒரே செடியில்
குத்திடும் முள்ளும்
மெல்லிய ரோஜாவும்
அது எப்படி..
ஒரே ஆண்டில்
வெயில் கொளுத்தும் கடும் கோடை
தென்றல் வீசும் வசந்த காலம்
அது எப்படி
உன் ஒருத்தியால் மட்டும்
என்னை காதலில் வாழ வைக்கவும் முடிந்தது
கல்லறையில் உறங்க வைக்கவும் முடிந்தது?
*