நிராகரிப்பின் நியாயம்..! - ப‌னசை ந‌ட‌ராஜ‌ன்

-ப‌னசை ந‌ட‌ராஜ‌ன், சிங்கப்பூர்

வருத்தமில்லை மகனிடம்
அவனது
நிராகரிப்பின் நியாயம்
புரிந்ததால்...

தோள் சுமந்து,
துரத்திச் சோறூட்டி,
சொல்லிச் சொல்லி
படிக்க வைத்து,
வளர்த்து உயர்த்திய
பிரியமான பெற்றோரையே
முதியோர் இல்லமென்ற
இருட்டுத் தனிமையில்
பிடித்துத் தள்ளிய எனக்கு
வருத்தமில்லை இப்போது...

ஊட்டுவது இருக்கட்டும்
உணவு உண்டாயா?
என்று கூடக் கேட்டதில்லை
என் மகனிடம் ஒருநாளும்...

பணம் துரத்தி ஓடியதில்-அவன்
படிக்கும் வகுப்பு கூட
பலமுறை மறந்து போகும்...

என் மனைவியின் நாட்களோ
பெரும்பாலும் தொலைகாட்சித்
தொடர்களிலேயே
தொலைந்து போகும்...

அதனால்தான்
அவள் இறந்து போன போது கூட
வருந்தி விட்டு
வர இயலாத சூழல் என்றான்
வெளிநாட்டிலிருந்து..!

அக்கறையாய் அவனை
அரவணைத்திருந்தால்
அனிச்சையாய் அன்பு
பெருக்கெடுத்திருக்கலாம்...

இப்போது
வருத்தமில்லை...
அவனது நிராகரிப்பின்
நியாயம் புரிந்ததால்!


Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
N Suresh
பிள்ளைகளை நன்றாக நேசித்து வளர்த்தினவர்கள் தான் அதிகமாக முதியோர் இல்லங்களில் காணக்கூடும் என்பது உண்மை என்று ஒருபுறம் இருக்க நேசிக்காதவர்களுக்கு இப்படி சமாதானப்படலாம் என்று சொல்லும் கருத்து நன்று. மறைமுகமாக பெற்றோர்களை கைவிடாதீர்கள் என்ற ஒரு கனிவான விண்ணப்பத்தையும் இந்த படைப்பில் உள்ளது, வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்! அன்புடன் என் சுரேஷ்

78 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.