
விடியற்காலை அன்று - என்
தலைமுடியை அன்போடு அகற்றின
பாவம் அந்த கத்தி மீது
எந்தன் கண்களுக்கு மட்டும் கோபம்!
இமைகளால் திரையிட்டு
சிலநேரம் இருளில்
கவலைகளை பார்வையிட்டது
என் கண்கள்!
புற்றுகள் ஏன் வந்தன
எந்தன் தலைக்குள்?
மரணத்தைக் கொண்டு வரும்
சர்ப்பங்களை வரவேற்கவா?
புற்றுகளை அகற்றினால்
மரணம் கொஞ்சம் தள்ளிப்போடலாம் - அல்லது
என்னுயிரை கொள்ளை அடிக்கலாம்!
எனது மரணபயம்
பயந்து பயந்தே செத்துப் போனதோ!
மிக அழகாக இருந்தன – எந்தன்
கடைசி ஆசைகளின் மலர் தோட்டங்கள்!
மருத்துவரின் கனிவு தந்த
இரண்டு நாள் சுதந்தரத்தில்
எந்தன் கடைசி ஆசைகளின் மலர்களை
ஒவ்வொன்றாய் சந்தித்தேன்!
ஆறுதல் கூறின
எல்லா மலர்களின் கண்ணீரும்
என்னைக் கண்டு புன்னகைத்தன – அதில்
கனிவும் அனுதாபமும்
என்னை முத்தமிட்டன!
இரண்டுநாள் சுதந்திரம்
இதோ இப்போது கரைந்து விட்டது
இன்னும் சில நொடிகளில்
அறுவைச் சிகிட்சைக்கு
எனது நினைவின்றி
என்னுடல் செல்லும்!
இந்நேரத்தில்...
இறைவனிடம்
ஒரு பிரார்த்தனை
"நான் மரணப்பட்டால்
உடனே
உன்னிடம் வரவேண்டும்!
அல்லது
இன்னமும் சில காலம்
ஏழைகளின் மகிழ்ச்சியில்
என் வாழ்க்கை
உந்தன்
பொன்முகத்தை காணவேண்டும்"