ஒதுக்கப்பட்டவை - ராமலக்ஷ்மி

- ராமலக்ஷ்மி, பெங்களூர்.

இட்லி வடை பொங்கல்
கெட்டிச் சட்னி சாம்பார்

உணவுப் பட்டியல் பார்த்து
விரும்பிக் கேட்டு வாங்கி
கலந்து கட்டி அடித்து
போதும் போதுமெனக்
கெஞ்சிய வயிற்றின் மேல்
இரக்கம் வைத்து
எழுகிற நேரம்

கடந்தது மேசையை
கமகம மசால் தோசை

'அடடா, விட்டு விட்டோமே'
கண்டும் காணாது நடந்தாலும்
சுண்டி இழுத்த மணத்தால்
மின்னல் வெட்டாய் வந்து மறையும்
அற்ப சிந்தனையை
எப்படி
மனதோடு சுமப்பதில்லையோ
அது போலவேதான்

நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை

வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!

*


Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.