அகமதாபாத், நவ.20,2009 : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ரன்கள் கடந்து, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதிந்துகொண்டார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ்சில் சச்சின் டெண்டுல்கர் 35 ரன்கள் எடுத்தபோது, இப்புதிய சாதனையை நிகழ்த்தினார்.

தற்போது, சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என இரண்டிலும் சேர்த்து 30 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கிரிக்கெட் உலகில் எந்த ஒரு வீரரும் நெருங்க முடியாது என்பது கிரிக்கெட் நோக்கர்களின் கருத்து.

டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளவர், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங். இவர், அண்மையில் தான் தனது 24 ஆயிரம் ரன்களைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகாலத்தைப் பூர்த்தி செய்துள்ள சச்சின் டெண்டுல்கர், இதுவரை ஒருநாள் போட்டிகளில் 17,178 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 12,812 ரன்களும், ஒரு சர்வதேச டிவென்டி 20 போட்டியில் 10 ரன்களும் எடுத்துள்ளார்.

இந்த மகத்தான சாதனையை சமகால கிரிக்கெட் வீரர்கள் நெருங்குவது என்பது மிகக் கடினமான ஒன்றாகும்.

மேலும், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையும் சச்சின் தான் தக்கவைத்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் தன்னிகரற்ற வீரராக திகழ்ந்து, இந்திய விளையாட்டுத் திறனின் அடையாளமாகத் திகழும் நம் சச்சினை...

வாழ்த்துவோம்... வாருங்கள்..!

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.