வணக்கம். நலமா..?
இது இளமையின் காலம். இளைஞர்களின் காலம். திறமையும், புத்துணர்ச்சியும் மிக்க இளைஞர் கூட்டத்தால்தான் உலகம் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் இன்டர்நெட் வசதி, இளைஞர்களின் புதியன தேடும் திறமைக்கு சரியான தீனி.
இணையத்தின் சகல இடுக்குகளிலும் இளமை நிரம்பி வழிகிறது. உலக நாடுகளின் முக்கிய நிகழ்வுகளுடைய உடனடி தாக்கம் இங்கு பிரதிபலிக்கிறது. கல்லூரி கலாட்டாக்கள், காதல் அனுபவங்கள் என மனதின் பர்சனல் பக்கங்களை அத்தனை அழகான மொழியில் கணிணித் திரைகளில் சுழல விடுகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க ஒரு மேடை வேண்டாமா..?
82 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இளமை மிடுக்குடன் உலகத் தமிழர்களின் முகவரியாய் ஜொலிக்கிற விகடன் அமைத்துத் தந்திருக்கும் மேடைதான் இந்த 'யூத்ஃபுல் விகடன்' பல்கலைத் தளம். இது ஓர் இலவச தளம். உங்கள் படைப்புத் திறமைக்கான களம்.
இதில் நீங்கள் எதைப் பற்றியும் எழுதலாம். எந்த எல்லையும் இல்லை. கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என இலக்கியப் படைப்புகளில் சடுகுடு ஆடலாம்.
உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை மலிந்து கிடக்கும் உன்னத படைப்புகளையும் அலசலாம். மொபைல் ஃபோனின் வீடியோ வசதியைப் பயன்படுத்தி ஒரு குறும்படம் எடுக்கலாம். அனிமேஷன், ஃபிளாஷ் பிளேயர், கிராஃபிக்ஸ் போன்ற நவீன டெக்னாலஜிகளை வைத்து மிரட்டலாம். புதிய கோணத்தில் விழி விரிய வைக்கிற புகைப்படங்கள் எடுப்பவர் எனில் அவற்றையும் வலையேற்றலாம்.
கல்லூரி கல்ச்சுரல்ஸில் எத்தனை சிரமப்பட்டு வித்தியாசமான நிகழ்ச்சிகளை செய்து அசத்தியிருப்பீர்கள்? அதுவெல்லாம் ஆடிட்டோரியத்தின் கைத்தட்டலுடன் முடிந்து போகலாமா? இணையத்தின் மூலம் உலகத் தமிழர்கள் அறிந்து கொள்ளட்டும். அனுப்புங்கள் அதையும். சுற்றுலா கொண்டாட்டங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
'இப்படித்தான், இதைத்தான் எழுத வேண்டும்' என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் தீர்மானிப்பது நீங்கள்தான். இளமைக் கொப்பளிக்கும் புதிய வகை எழுத்து நடையை அறிமுகப்படுத்தும் ட்ரெண்ட் செட்டராக இருங்கள். உலகின் உன்னதங்களை தமிழர்களுக்குக் கொண்டுவந்து சேர்க்கும் கருவியாக இருங்கள்.
படைப்புகள் எதுவாக இருந்தாலும் யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்து அனுப்புங்கள். வேறு ஃபான்ட் எனில், மறக்காமல் அதையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி... youthful@vikatan.com
உங்கள் பங்கேற்புக்கும், ஆலோசனைக்கும் காத்திருக்கிறது, யூத்ஃபுல் விகடன்!
யூத்ஃபுல் விகடனுக்கு படைப்புகளை அனுப்ப...
|