'விமானப்படையில் தமிழக இளைஞர்கள் சேர வேண்டும்'

சென்னை, பிப்.5,2010

விமானப்படையில் தமிழக இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்றும், இதற்காக அரசு உதவியுடன் விழிப்பு உணர்வு முகாம் நடத்தப்படவுள்ளது என்றும் விமானப்படை அதிகாரி ஏர்மார்ஷல் வி.ஆர்.அய்யர் தெரிவித்தார்.

தமிழகத்தில் விமானப் படை தளங்களின் வசதி குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியுடன் தலைமை பயிற்சி கமாண்டர் ​(பெங்களூர்)​ வி.ஆர்.அய்யர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.​

பின்னர்​​ செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " சென்னை - தாம்பரம், ஆவடியில் உள்ள விமானப்படை தளங்களில் வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதால், அதனை மேம்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தேன்.

தற்போதைய நிலைப்படி, விமானப் படையில் தமிழர்களின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது. அதாவது, மொத்தத்தில் 3 சதவீதம் நபர்களே உள்ளனர். ஆனால், உத்தரபிரதேசம், பீகாரில் 45 சதவீதம் பிரதிநிதித்துவம் உள்ளது.

எனவே, விமானப்படையில் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசு உதவியுடன் விழிப்பு உணர்வு முகாம் நடத்தவுள்ளோம்," என்றார் வி.ஆர்.அய்யர்.

*

இந்திய விமானப் படையில் பல்வேறு பிரிவுகளின் கீழுள்ள வாய்ப்புகள் குறித்து அறிய...

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.