மாணவர்கள் தற்கொலை ஏன்? - 2 : காரணம் ஆயிரம்!

- அருணா சுரேஷ்

மாணவர்கள் தற்கொலைக்குத் தீர்வு என்ன என்று யோசிப்பதற்கு முன்னால், அந்த பாதக எண்ணத்தைத் தூண்டும் காரணிகளைப் பார்ப்போம்.

போட்டி... எங்கும் போட்டி - எதிலும் போட்டி. Survival of the fittest எனும் வாக்கியம்தான் மிக மிக முக்கியமான காரணமாக நினைக்கிறேன். Fittest ஆக இல்லாதவன் வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாதா?

ஓடிக் கொண்டேயிருப்பவன் வெற்றி நூலை அறுத்தெறியும் நேரத்தில், அந்த வெற்றிக்கான இலக்கு இன்னும் கொஞ்சம் நகர்ந்து போய்விட்டால் என்ன மனநிலை ஏற்படும் என்பதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.

இந்த FITTEST வட்டத்துக்குள் பொருந்த முடியாமல் போவது கூட தற்கொலைக்கான காரணங்களுள் ஒன்றாகும்.

மேலும், குழந்தைகள் மீது பெற்றோர்களால் திணிக்கப்பட்ட, வெற்றி மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மையும் கூட தற்கொலைக்கான காரணங்களுள் ஒன்று.

பரீட்சையில் தேர்ச்சி அடைகிற பையனாக இருந்தால் ஃபர்ஸ்ட் ராங்க் எடுக்கவில்லை என்கிற அழுத்தம், நாட்டியம் ஆடுகிறவள் என்றால், முதல் பரிசு வாங்கவில்லையே என்று வருத்தம், பாடுகிற குழந்தையை 'டி.வி.லே பாடப் போ' எனும் ஆர்ப்பாட்டம்...

இப்படியான ஓட்டத்தை நர்சரியிலேயே ஆரம்பித்து விடுகிறார்கள் இந்தப் பெற்றோர்கள்.

30 மார்க் வாங்குபவனை பாஸாகி விடு என்பது, 50 மார்க் வாங்குபவனை 60 வாங்கு என்பது, 60 எடுத்து மூச்சு விடும்போது 70 வாங்க விரட்டுவது, 70 கடந்தவுடன் 80 வாங்கு...

நீ நினைத்த படிப்பு என்று ஆசை காட்டுவது, 80 அடைந்தவுடன் 90 வாங்கு - வகுப்பில் முதல் மாணவனாகு என்றும் வகுப்பில் முதல் மாணவனை பள்ளியில் முதல் வர வெறியேற்றுவது, பள்ளியில் முதல் வந்தால் மாநிலத்தில் முதல் வாங்க அழுத்தம் கொடுப்பது என எல்லையில்லாமல் விரிந்து கொண்டே போகும் எதிர்பார்ப்பு எனும் அலையில் ஒரு நொடியில் வாழ்வையே உதறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் சில மாணவர்கள்.

98 வாங்கிய மாணவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல், 'மீதி ரெண்டு மார்க் எங்கே போச்சு?' என்று ஆரம்பிப்பது, எந்த விதத்தில் நியாயம்?

"தலை தலையாய் அடிச்சுக்கிட்டேன், இந்தக் கணக்கை திருப்பித் திருப்பிப் போட்டுப் பாருன்னு, கேட்டியா!? இப்போ பாரு ரெண்டு மார்க் போச்சு!"

'சபாஷ்' எதிர்பார்த்த குழந்தையிடம் உடனேயே அந்தக் கணக்கை மறுபடி படச் சொல்லி உத்தரவு.

அந்தக் குழந்தை என்ன எதிர்பார்க்கிறது?

நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?

பாடம் யாருக்குத் தேவை?

குழந்தைகளுக்கா? பெற்றோருக்கா?

பள்ளி மாணவர்கள் இப்படி மதிப்பெண்களுக்குப் பின்னால் உயிரைத் தொலைப்பதுவும், போட்டிகளுக்குப் பயந்து உயிரை விடுவதும் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருக்க, கல்லூரி மாணவர்கள் உயிரை விடுவது அசுர வேகத்தில் ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பொதுவில் பொறியியல் கல்லூரிகளில் தற்கொலை நிகழ்வுகள் அதிகமாக இருக்கிறது. காரணம்... ராகிங் ஒரு பக்கம் என்று சொல்லப்பட்டாலும், ஆழ்ந்து கவனித்தால் மேலும் சில பல காரணங்கள் வெளிப்படும். அதையும் தொடர்ந்து கவனிப்போம்.

தற்கொலை செய்ய இந்த மாணவர்கள் எழுதி வைத்த காரணங்கள் அல்லது பிறர் மூலம் அறியக் கிடைத்த காரணங்களில் குறிப்பிடத்தக்கவை:

* செல்ஃபோன் வாங்க பணம் தராததால்

* செல்ஃபோன் இல்லாததால்

* பரீட்சையில் தோல்வி

* மாணவர்கள் கேலி செய்வதால்

* மற்றவர்கள் போல வாழ்வை எதிர்கொள்ள முடியவில்லை

* மற்றவர்கள் இருப்பது போல என்னால் பணம் செலவழிக்க முடியவில்லை

* காதலில் தோல்வி

* குறைந்த மதிப்பெண் காரணமாக பெற்றோர்கள் திட்டியதால்

* நன்றாக படிக்கும் மாணவன் ஒரு சில முறை குறைந்த மதிப்பெண் வாங்கும்போது ஆசிரியர் திட்டியதால்.

* தவறு செய்ததால், 'பெற்றோர்களைக் கூட்டிக் கொண்டு' என்று ஆசிரியர் சொல்லியதால்.

* தேர்வு நன்றாக எழுதவில்லையோ என்ற பயத்தால் (அதே மாணவன் 90 மார்க் வாங்கியிருந்தான் என்பதுதான் வருத்தத்துக்குரியது)

இவற்றை கூர்ந்து நோக்கும் போது மாணவர்களின் வாழ்க்கை அத்தனை எளிதல்லவோ என்றிருக்கிறது. ஆனால், எளிதாக இருந்தவற்றைச் சிக்கலாக்கிக் கொண்டது நாம்தானோ?

அலசுவோம்...

முந்தைய அத்தியாயம் : மாணவர்கள் தற்கொலை ஏன்? - 1

*

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
shahul abu
என் மகளுக்கு பள்ளி படிப்பை அப்படியே கற்று கொடுக்கும் அவள் அம்மா... நானோ அவளுக்கு அதையும் தாண்டி பல விஷயங்கள் படிப்பு சார்ந்த விஷயங்களை அவ்வப்போது சொல்லி கொடுப்பதன் மூலம் உலக நடப்புகளையும் அறிந்து கொள்கிறாள்.. ஆனால் இப்போதைய கல்வித்திட்டம் சரியானதாக இருப்பதாக தோன்றவில்லை. எப்போதும் மனாழுத்தம் தரும் பாடமாகவே இருக்கு.. ஐ லைக் கேக் அன்பதற்கு பதிலாக மாணவி ஐ லைக் பிஸ்கட் என்று எ௯ழுதியதால் ஒரு மார்க்கை கொட்டை விட்ட செய்தியை என்ன சொல்வது? இதில் என்ன தவறை அந்த ஆசிரியர் கண்டுபிடித்து விட்டார்? மாணவர்களின் பொது அறிவை வளர்க்க வக்கத்த இந்த ஆசிரியக்கூட்டம் புத்தகத்தை அப்படியே வாந்தி எடுக்க கே.ஜி வகுப்பிலிருந்தே பழகிகொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதனால் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பாதிக்கப்படுவது உண்மையே.. மேலும் அக்குழந்தை மன அழுத்தத்திற்கும் ஆளாக நேரிடுகிறது..

151 day ago | Report abuse

shahul abu
என் மகளுக்கு பள்ளி படிப்பை அப்படியே கற்று கொடுக்கும் அவள் அம்மா... நானோ அவளுக்கு அதையும் தாண்டி பல விஷயங்கள் படிப்பு சார்ந்த விஷயங்களை அவ்வப்போது சொல்லி கொடுப்பதன் மூலம் உலக நடப்புகளையும் அறிந்து கொள்கிறாள்.. ஆனால் இப்போதைய கல்வித்திட்டம் சரியானதாக இருப்பதாக தோன்றவில்லை. எப்போதும் மனாழுத்தம் தரும் பாடமாகவே இருக்கு.. ஐ லைக் கேக் அன்பதற்கு பதிலாக மாணவி ஐ லைக் பிஸ்கட் என்று எ௯ழுதியதால் ஒரு மார்க்கை கொட்டை விட்ட செய்தியை என்ன சொல்வது? இதில் என்ன தவறை அந்த ஆசிரியர் கண்டுபிடித்து விட்டார்? மாணவர்களின் பொது அறிவை வளர்க்க வக்கத்த இந்த ஆசிரியக்கூட்டம் புத்தகத்தை அப்படியே வாந்தி எடுக்க கே.ஜி வகுப்பிலிருந்தே பழகிகொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதனால் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பாதிக்கப்படுவது உண்மையே.. மேலும் அக்குழந்தை மன அழுத்தத்திற்கும் ஆளாக நேரிடுகிறது..

151 day ago | Report abuse

Ezhil
மிகாருமையான கதை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

188 day ago | Report abuse

Raman
மிகவும் அருமை அருணா சுரேஷ், தங்கள் பணி தொடரட்டும்! நானும் பள்ளிப் பருவத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவன் தான்! நம்மைப்போல் எத்தனை பேரோ இங்கே! தாங்கள் ஒரு ஆசிரியர் எனும்போது, மேலும் சந்தோஷமாக இருக்கிறது.

199 day ago | Report abuse

mani
thought provoking.

210 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.