காந்தி நோட்டு : ஹைக்கூ - அருணன்

- அருணன்

காந்தி நோட்டு

ஐந்தில் வளையாதது
ஐந்நூறில் வளைந்தது
அதிகாரியின் கை எழுத்து

*

தரிசனம்

பாலில் குளித்து
பஞ்சாமிர்தம் பூசி
சந்தனம் மணக்க
கல்லுக்கு அபிஷேகம்
பசியோடு நீட்டிய
பக்தனின் கையில்
சாம்பல்

*

உண்மை

வாய் கூசாமல்
பொய் சொல்கிறார்கள்
முள் குத்தியதாம்
செருப்பு கடித்ததாம்
கல் தடுக்கியதாம்

*

நிதர்சனம்

மாடு தாண்டி
குதிரை ஏறி
எந்திரங்களில் தொற்றிப்
பயணம் போன
மனிதன் மீதேறிப்
பயணிக்கும் காலம்

*

வால்

ஒரு காலத்தில்
மிருகங்களின் பின்னால்.
இன்னொரு காலத்தில்
மனிதருக்கு அறிவால்.
இந்தக் காலத்தில்
மதங்களின் பெயரால்

*

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
kurinjivendan
பொய்மையைப் பூசி நடிக்கும் இச்சமூகத்தின் மீது அம்புகளாய் அருணனின் கவிதைகள் பாய்கின்றன. தொடருட்டும் கவிதைக்கணைகளின் பயணம்.

208 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.