சிவகங்கை, நவ.06 : தமிழைப் பாடமாகக் கொண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை உயர்த்தியுள்ளது தமிழக அரசு.
தமிழைப் பாடமாகக் கொண்டு பொதுத் தேர்வு எழுதி, மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் அரசு சார்பில் பரிசுத் தொகை கொடுத்து கவுரவிக்கப்படுகின்ற்னர்.
கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பு, மெட்ரிக் வகுப்புகளுக்கு முதல் பரிசாக ரூ7,500, இரண்டாம் பரிசாக ரூ.6,000 மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. பிளஸ்2 வகுப்புக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.12 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு மாநிலத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பரிசு தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்றும். பிளஸ் டூ வகுப்பில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அரசு முதன்மை செயலர் குற்றாலிங்கம் தெரிவித்துள்ளார்.
|