|
- ஹாசிப், துபாய்
துபாயிலிருந்து நான்
விரல்களை எண்ணிக்கொண்டு
கட்டிலுக்கு அடியில் படுத்துகொள்ளும்
பணயகைதி

*
மனைவி
மேசென்ஜெர் சைன் அவுட்
செய்தும்
வெப் காமில் வழியும் தனிமை.
*
மகன்
செல்போன் மணிக்கு எல்லாம்
வாப்பா என்று
ஓடி வருகிறான்
*
அம்மா
சம்பாதிக்கிற சமயம்தான்
சம்பாதிக்க முடியும்
என்கிற அம்மாவுக்கு தெரிவதில்லை
காதலிக்கிற நேரம்தான்
காதலிக்க முடியும் என்று.
*
பாட்டி
இருபத்தைந்து வருடங்களாக
மாமாவின் சென்ட் வாசனையே
அறிந்தவளுக்கு தெரிவதில்லை
மாமாவின் வியர்வை வாசம்.
*
|