தொலைக்க முடியாமல்... - கவிநயா

- கவிநயா

தலையில் எழுதிய எழுத்துக்கள்
தானாய் இறங்கி வந்து
மூளையை அணைத்து
முள்முத்த மிடுகின்றன...

நெஞ்சில் விழுந்த கீறல்கள்
நீண்டு திரிசூலங்களாகி
புதைத்து வைத்த பூகம்பங்களை
புரட்டிப் பார்க்கின்றன...

அக்கினிக் குஞ்சொன்று
அடிவயிற்றில் அமர்ந்து கொண்டு
தன்தணல் முட்டைகளை நொடிவிலகாமல்
அடைகாத்துக் கொண்டிருக்கிறது...

எங்கே சென்றாலும்
விடாக் கண்டனாய்
கூடவே வந்து தொலைக்கிறது மனசு..
தொலைக்க முடியாமல்..!

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
V.Annasamy
மனமின்றிப் போனால் நினைவுக ளேது? கனவின்றிப் போனால் சாதனைக ளேது? தினமும் சோர்வின்றி வாழ்வில் ஏற்றம் காணவே ஓர்முனை படுத்துவோம் மனதை !

107 day ago | Report abuse

திகழ்
அதைத்தான் தொலைக்க முடியாமல் தவிக்கின்றோம். நன்றாக இருக்கிறது அன்புடன் திகழ்

241 day ago | Report abuse

Ramalakshmi
தொலைக்க முடியாமலேதான் தொடர வேண்டியிருக்கிறது. நல்ல கவிதை கவிநயா.

249 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.