சிலவகைத் தம்பதிகளும், அவர் தம் தாம்பத்யமும் - இல்லறக் கட்டுரை


- மன்னார் அமுதன்

வ்வொரு நாளும் நம் கண் முன் மகிழ்ச்சியாக வலம் வரும் தம்பதிகள் ஏராளம். எல்லோரும் உண்மையிலேயே சந்தோசமாகத் தான் உள்ளார்களா என்று பார்த்தால்; நிச்சயமாக இல்லை. பள்ளமும், மேடும்; ஊடலும், கூடலும் நிறைந்ததே வாழ்க்கையென்றாலும் பெரும்பாலான தம்பதிகளின் வாழ்வில் ஊடலும், உள்ளத்தில் பள்ளமுமே உள்ளது. இந்தப் பள்ளத்தில் பாசத்தை நிறப்பாமல் ஏன் வேசத்தை நிறப்பித் திரிகிறார்கள்?...

அயலில் உள்ள அக்கா வீட்டிற்கு போக நேர்ந்தது. அதன் விளைவே இப்பதிவு.

பிசைந்து வைக்கப் பட்டிருந்த மாவிற்கு அருகில் அமர்ந்திருந்த அக்காவிடம் கேட்டேன்.

நான்: ஏன் அக்கா மாவைப் பிசைந்து வைத்து விட்டு கவலையாக இருக்குறீங்க. ரொட்டியைப் சுட வேண்டியது தானே.

அக்கா: பசிக்குது தம்பி. என் கணவர் கடைக்குப் போயிட்டார். அதான் அவர் வர்ற வரைக்கும் பாத்திட்டிருக்கேன்.

நான்: அதுவும் சரி தானக்கா. வந்தப்பிறகு ரொட்டி சுட்டா, சூடா சாப்பிடுவேர் தான். புருசன் சாப்பிட்ட பிறகு சாப்பிடனும் என்பதெல்லாம் அந்தக்காலம் அக்கா. நீங்க சுட்டு சாப்பிடுங்களேன். ஏன் பசியோட இருக்கிறீங்க?

அக்கா: அவர் மாவைப் பிசைந்து கொண்டிருகையில தான் கடைப்பொடியன் வந்து கூப்பிட்டான். அவர் வந்து தான் ரொட்டி சுடோனும்.

அதென்னண்டா தம்பி, நான் வெளிநாட்டுப் பொடியன தானே முடிக்கிறதா இருந்துது. அங்க இப்பிடி எல்லாம் சமைக்க மாட்டாங்க எண்டு சொன்னாங்க. அதான் நான் சமைக்கப் பழகல.

நான் கண்ட சிலவகைத் தம்பதிகளும், அவர் தம் தாம்பத்யமும். தாம்பத்யம் மூலமே அன்னியோன்யம் வளர்கிறது. அதுவே அவர்களைப் பிரிக்க முடியா பந்த பாசத்திற்குள் கட்டி வைக்கிறது என்பது என் கருத்து.

வகை 1.

தம்பதிகளில் கணவன் குடிகாரனாகவும், நாள் தவறாமல் நன்கு குடித்து விட்டு மனைவியை வதை செய்பவனாகவும் இருக்கிறான். இல்லையென்றால் சந்தேகம் கொண்டு வார்த்தைக் கணைகளால் காயப் படுத்துகிறான். அவன் மனைவியோ அனைத்தையும் தாங்கிக் கொண்டு தன் கணவனைத் எப்பாடு பட்டாவது திருத்தி விட வேண்டுமென பிரயாசைப்படுகிறாள்.

இவ்வாறு நல்லெண்ணம் கொண்ட மனைவியையும், தீய எண்ணம் கொண்ட கணவனையும் நாம் அன்றாட வாழ்வில் காண்கிறோம்.

வகை2:

கணவன் மிகவும் நல்லராக இருப்பார். மனைவியோ அவரின் குணாதிசயங்களுக்கு சிறிதும் பொருத்தமில்லாத குணங்களைக் கொண்டு இருப்பார். தன்னுடையை புத்திக்கு எட்டாத சிறு சிறு விசயங்களுக்காக அவள் அவனோடு எந்நேரமும் சண்டையிடுபவளாக, ஒவ்வொரு விசயத்திலும் தன்னை முன்னிருத்த முயன்று முயன்று, முடியாத நிலையில் கணவனைச் சாடுபவளாக இருக்கிறாள்

வகை3:

கணவன் தன் வேலையைத் தான் பார்ப்பார். மனைவி தன் வேலையை தானே பார்த்துக் கொள்வார். இருவரும் எப்போதும் ஒருவராகாமல், இருவராகவே வாழ்ந்து வருவார்கள். இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளாமல், ஒருவருடைய விடயத்தில் மற்றொருவர் பங்கெடுக்காமல், தோள் கொடுக்காமல் நான்கு சுவருக்குள் ஊருக்காய் வாழ்வார்கள். இவர்களுக்குள் ஊடலும் இல்லை. கூடலும் இல்லை. சரியாகச் சொன்னால் இவர்கள் தம்பதிகளே இல்லை.

வகை4:

வெகுசில தம்பதிகள் மட்டுமே ஊடல் மற்றும் கூடலுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இருப்பினும் இவர்களில் ஒருவர் விரைவிலேயே மரணித்து விடுகிறார்கள். அல்லது இவர்களுடைய மரணம், நமக்கு வெகு விரைவிலேயே ஏற்படுவது போல் தோன்றுகிறது.

நல்லவனுக்கு கெட்ட மனைவியும், கெட்டவனுக்கு நல்ல மனைவியும், மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற கடுமையாக உழைப்பவனுக்கு விபச்சாரியும், உத்தம பத்தினிக்கு மது, மாதுவுடன் புழங்கும் கணவனும் அமைவது ஏன்?

இதனை இயற்கை, இயற்கையின் சமச்சீர் விதி என்று புறந்தள்ள முடியவில்லை. இல்லறப் புரிந்துணர்வுகள் பற்றி தொண்டை கிளியக் கத்தினாலும் ஏன் காலம் காலமாக இவை மாறாமல் உள்ளன.

மனப் பொருத்தம் பார்க்காமல், பணப் பொருத்தம் பார்ப்பதாலா? அல்லது திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாலா? நீங்களும் சொல்லுங்கள்....

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
Saathiya
காதல் இப்பிரச்னைக்கு நல்ல தீர்வாகாது ஏனெனில் பெரும்பலானோர் தம்முடைய நல்ல பக்கத்தை மட்டுமே காதலிக்கும் போது காட்டுகிறார்கள்

124 day ago | Report abuse

sathyavinoth
love each other then get marry. becoz love makes the silence to understand. every one should love and then marry

125 day ago | Report abuse

s.Mohamed Abubucker
திருமணம் ஒன்றுதான் ஒத்திகை இல்லாமல் விவாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் விசயம்.பெண்ணையும்,மாப்பிளையையும் பார்த்து பேசிவதில் மட்டும் குணநலங்களை அறிந்து கொள்ள இயலாது.அப்படியே நல்லவர்களாகத்தெரிந்தாலும், திருமணத்திற்குப் பிறகு தாமபத்ய விசயங்களிலும், பொருளாதார பிரச்சினைகளும் மாறிப்போகும் வாய்ப்பும் உள்ளது.இருப்பதைக்கொண்டு அனுசரிப்பதே வாழ்க்கை. சா.முகம்மது அபுபக்கர்

127 day ago | Report abuse

javaa
கல்யாணத்தை பண்ணி பார்.... உனக்கு விடை தெரியும்..

128 day ago | Report abuse

Usha
A very good classification of real relationships. Having been married for over 25 years and seen so many other relationships all over the world, I think someone up there is palaying a joke on human beings. But what matters is that our offsprings turn out alright. Regardless of how the marriage/relationship is formed, all of what you say is applicable.

128 day ago | Report abuse

chellappan
விட்டுகொடுத்தல் இல்லாத வாழ்க்கை சுகமாக இருக்காது.

128 day ago | Report abuse

udayakumar
விட்டு கொடுத்தலும், புறிந்துனர்வுமே முதலில் அன்பையும், பாசத்தையும் உருவக்கும். உடல் உறவு என்பது பிரகுதான். கனவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேச நேரம் ஒதுக்காமல் பனம் என்ற குரிக்கோலுடன் இருக்க வைக்கும் இந்த மாடர்ன் உலஹமே காரணம்.

129 day ago | Report abuse

kirthika
நிறைய குடும்பத்தில் மாமியார்கள் கூட கணவன் மனைவி இடையே சண்டை வர செய்து ரசிக்கிறார்கள்.தம்பதிகள் சிரித்து பேசினால் பொருத்து முடியாமல் மிகவும் கஸ்டப்படும் இவர்கள் கிடைக்க நாம் என்ன பொருத்தம் பார்த்து என்ன?

129 day ago | Report abuse

sangameswari
சாட்டை பொது. முதலில் கையில் எடுப்பவர் அதிகாரம் ஓங்குகிரது.. தவற‌விட்டவைர் compramize only

130 day ago | Report abuse

dr. k. selvam
after marriage within a 3 month better understanding is must. i think this is a crucial period for couples.

130 day ago | Report abuse

mannar
என்னட மன்னர் அமுதா உனக்கு திருமணம் முடிந்ததா? இல்லையா? மச மசானு செல்லுற‌ தெலிய‌வில்லையே

130 day ago | Report abuse

manivannan
மனித மணம் எப்போதும் தனக்கு தெரியாததை எண்ணி பயப்படுவதிலேயே காலத்தை கழிக்கின்ட்ரது. நல்லது நடந்தால் இது எவ்வளவு காலம் நிலைக்கும் என்ற பீதி. கெட்டது நடந்த்தால் எனக்கு மட்டும் ஏன் இது நடக்கிறது என்கிற கழிவிரக்கம். வாழ்க்கை என்பது அனுபவத்தை கற்றுத்தரும் ஒரு பள்ளியே. நினைப்பதெல்லாம் நடந்தால் ஒருவனுக்கு சொர்க்கமும் நரகமே

130 day ago | Report abuse

neemo
it because of money, misunderstanding, absence of mana porutham, 70% of parents(they look for caste,money & society),base character sholud be good both for male & female, like to enjoy life, some time girl have more dreams,expecting more love & affection from husband, but he will be money motivated ..in this of catagory -how come its possible to have good porutham.... so its fully depends on fate even at this kaliyugam......

130 day ago | Report abuse

sam
இருப்பினும் இவர்களில் ஒருவர் விரைவிலேயே மரணித்து விடுகிறார்கள். அல்லது இவர்களுடைய மரணம், நமக்கு வெகு விரைவிலேயே ஏற்படுவது போல் தோன்றுகிறது.- - இந்த வரிகளை எழுதாமல் இருந்திருக்கலாம். அப்படி மனம் ஒத்த தம்பதிகளுக்குள் இந்த விடயம் ஒரு வருத்ததை ஏற்படுத்தும்.

130 day ago | Report abuse

Jey
மிகவும் சரியான கருத்து

130 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.