'டமில் வால்க' - ஒரு ஜாலி கானா

- நிலா முகிலன்

'தமில் வால்க' தலிவரு
புள்ள இங்கிலீசு பேசும்
பிகரு கிட்ட தமில்ல பேசினா
இங்க்லீசுல ஏசும்!

பீச்சாங்கர பக்கம் போனா
ஏகப்பட்ட மீனு...
ஸ்டெல்லா காலேஜ் பொண்ணுக கேக்குது
வாட் டூ யு மீனு..!

தங்க்லீசுல பேசினாக்கா
ஒன்னும் பிரியல...
இங்க்லீசு பேசாட்டி போனா
நீயும் தருதல..!

தொல காட்சி பொண்ணு எல்லாம்
தங்கலீசு பேச...
இதுங்க குப்பத்து டமில் பேச தான
எனக்கும் ஆச!

பிகுலு பார்ட்டி டகுலு டோமர்ன்னு
நானும் சொன்னா...
இந்த இங்க்லீசு பார்ட்டிங்க புரியாம
போடும் டண்டனக்க..!

நா குப்பத்து டமில் சொம்மா எட்த்து உட்டா..
இங்க்லீசு சனங்க மெர்சல் ஆகி ஓடும்
சுப்பனுக்கும் குப்பனுக்கும் பிரிற மாறி
டமில் நீயும் பேசினாக்க கொறஞ்சா பூடும்!

*

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
senthil
சூப்பரு தலிவா... சொம்மா இந்த பொண்ணுங்க பிலீமு காட்டுவாலுங்க... நீ கவல படாத தலிவா... உன்கு பீச்சான்ட சில வச்சுரலாம்...

62 day ago | Report abuse

Gk...
Oooh... my my... hey... did u see this...?

63 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.