யூத்ஃபுல் விகடனுக்கு படைப்புகளை அனுப்ப...


யூத்ஃபுல் விகடன் தளத்துக்கு படைப்புகளை youthful@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Wordpad அல்லது Notepad மூலம் இணைத்து அனுப்பலாம்.

புதிய படைப்புகளுக்கே முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படும். அனுப்பப்படும் படைப்புகள் இதுவரை இணையத்தில் வெளியாகாமல் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.

இளைய சமுதாயத்துக்கு பயன் தரக்கூடிய படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு www.vikatan.com முகப்பு பக்கத்தில் இணைக்கப்படும்.

படைப்பாளிகள் தங்களது படைப்புகளுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பலாம். (ஒருமுறை மட்டும் அனுப்பினால் போதுமானது)

இளம் படைப்பாளிகள் மட்டுமின்றி, இளைய சமுதயாத்துக்காக எந்த வயதினரும் படைப்புகளையும் கட்டுரைகளையும் எழுதி அனுப்பலாம்.

படைப்புகளை அனுப்புவோர் தங்களது பெயர், வயது, கல்வி, முகவரி, செல்பேசி எண்கள் முதலியன அடங்கிய சிறு சுய விவர குறிப்பை இணைக்க வேண்டியது அவசியம். (ஒரு முறை மட்டுமே அனுப்பினால் போதுமானது)

புகைப்பட தொகுப்புகளை வெளியிட விரும்புவோர் மின்னஞ்சலில் இணைத்தோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பலாம்.

குறும்படம், ஆவணப்படம், அனிமேஷன் ஆக்கங்களை சி.டி அல்லது டி.வி.டி. வடிவில் "யூத்ஃபுல் விகடன், விகடன் டாட் காம், 757, அண்ணா சாலை, சென்னை - 600002" என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

யூத்ஃபுல் விகடனில் வெளியாகும் படைப்புகளின் உரிமை முழுதும் அந்தந்த படைப்பாளிகளுக்கே உரியது.

படைப்பு வெளியானவுடன், அதுபற்றி விவரம் மின்னஞ்சல் மூலம் ஓரிரு நாட்களுக்குள் தெரிவிக்கப்படும்.

 

 

 

 

 

Copyright@2009 Vikatan.com Pvt Ltd. all rights reserved