சாயம் போகாத சாயும்காலம் - பத்மாவதி

- பத்மாவதி

இருபத்திமூன்று அடி உயரம்
இருக்கும்
அந்த பலகையில்
சாயம் பூசிக் கொண்டிருந்தான் -
பிடிமானமாக சணல் கயிறு

நேராக
தொங்கிக்கொண்டிருந்த வாளி
சீராக
பிடித்திருந்த தூரிகை
தொட்டபெட்டா சிகரத்தில் அவன்

ஒரே வினாடி தான்
லாரியில் மோதி
வீசி எறியப்பட்ட
ஒரு நாயை போல
கைகால் வெட்டப்பட்டு
கிழே எறியப்பட்டான்

தார் சாலை
செந்நீர் சாலை ஆனது
மூளை உடைந்ததில்
மூலை முடுக்கெல்லாம் ரத்தம்
கையிலே மட்டும்
பச்சை சாயம்
தரை தோறும்
சிகப்புச் சாயம்
நாடிகள் துடிப்பை நிறுத்தியது

அய்யோ
ஆறு மாசம் வராமல் இருந்த
கைகால் வலிப்பு
அறுபதடி உயரத்துல இருக்கும் போது தான் வரணுமா
சாயம் அடிச்சா தானே சாயுங்காலம் சாப்பாடு

அலறல் கவல்கிறது

அவன் அடித்த
கடைசி அஞ்சலி பலகையும்
பாதியில்

-

பத்து மாதமாக
எதிர்பார்த்த பணிமாற்றம்
இந்த ஊர் பிடிக்காமல்
கேட்ட இடமாற்றம்
பிறப்பு முதல்
எதிர்பார்த்த நிறமாற்றம்
பேருந்தில் அமர்ந்தபடியே
நான் யோசிக்கிறேன்

எத்தனையோ
தடுமாற்றங்களும்
ஏமாற்றங்களையும் தாண்டி
மனம் எதிர்பார்கிறதே
மாற்றத்தை...

*

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
Kolanji
Hi Padma, it is really touching one yaar... Kolanji

12 day ago | Report abuse

kathiravan
தடுமாற்றங்களும்,ஏமாற்றங்கலும் தடையெ இல்லை

34 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.