|
ஒரு சோறு பதம்!
"அன்பார்ந்த இறுதியாண்டு மாணவர்களே... நாம் இதுவரை புளிச் சோறு தக்காளிச் சோறு, தயிர்ச் சோறு போன்றவற்றை மட்டுமே ருசித்துள்ளோம். இன்னும் ஐந்தே மாதங்களில் நாம் 'தண்டச்சோறு' என்பதையும் ருசிக்கவுள்ளோம் என சங்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்!"
இப்படிக்கு, அனைத்திந்திய இறுதியாண்டு மாணவர்கள் சங்கம் (இன்னும் பதிவு செய்யவில்லை)
- எஸ்.யமுனைச் செல்வன்
*
'காதல்'னா?
கா - காத்திருக்க வை
த - தவிக்க விடு
ல் - ல்லாமல் போ!
எப்பூடி..!
- எல்.எம்.அபிதா
*
மவனே நட்புடா!
லவ் என்பது இன்கமிங் கால் போல. அது வரும்போது அட்டென்ட் பண்ணனும். இல்லைன்னா, மிஸ்டு கால் ஆயிடும். ஆனா, நட்பு என்பது எஸ்.எம்.எஸ். போல. நாம உடனே அட்டென்ட் பண்ணலைன்னாலும் இன்பாக்ஸ்ல வெயிட் பண்ணும்!
- ஆர்.பி.ரூபன் பிளிண்டாஃப்
*
வேண்டாம் பண்டமாற்று!
'எப்பண்டம் யார்யார் கொடுப்பினும் அப்பண்டம்
மெய்ப்பண்டமா எனக் காண்பதறிவு!'
இப்படிக்கு, ரயிலில் இலவச தின்பண்டங்களைத் தின்று உடைமைகளைத் தவறவிட்டோர் சங்கம்!
- ஜி.வி.மனோ
*
ஒரு கேள்வி
ஒரு பதில்!
"Super-Offer விளக்குக?"
"உனக்கு சினேகா மாதிரி அழகான லவ்வர் இருந்தா அது 'Super'. அவளுக்கு இலியானா மாதிரி அம்சமான ஃபிகர் ஃப்ரெண்டா இருந்தா அது Offer!"
- ஜொ.ஜெயக்குமார்
*
காதலியைக் காதலி
'காதலின் சின்னம் கேட்டேன்
அவள் கல்லறை என்றாள்!
கல்லறைக்கு வழி கேட்டேன்
என்னைக் காதலி என்றாள்!
-சின்சியராக காதலித்து வீணாய் போனோர் சங்கம்
- எஸ்.ஜெயகாந்தன்
|