Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
   
   
கேப்டனை விட மோகன்லால் சாதித்தது என்ன?!! - ஒரு கொந்தளிப்பு் கடிதம்!
 

- பிளாக்கன்

னது பகிரங்கக் கொந்தளிப்பு கடிதம்...

"மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, இந்திய ராணுவத்தில் கெளரவ கர்னல் பதவி வழங்கப்பட்டது. அவரை ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் நியமனம் செய்தார்..." என்ற செய்தியைத் தொலைக்காட்சியில் கேட்டபோது ஆச்சரியப்பட்டேன். அதேநேரத்தில் பயங்கர அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானேன்!

அப்படி என்ன செய்துவிட்டார் மோகன்லால்..!?

மேகன்லால் மலையாள திரைப்பட உலகின் முன்னணி நடிகர். பலவிதமான கதாப்பாத்திரங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளையும் குவித்தவர். ராணுவ அதிகாரியாக சில படங்களிலும் நடித்து முத்திரை பதித்தவர். இதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. அவரது படங்கள் பல நானும் ரசித்து பார்த்திருக்கிறேன்.

ஆனால், இரண்டே இரண்டு திரைப்படங்களில் ராணுவ அதிகாரியாக நடித்ததை மட்டும் வைத்து ராணுவத்தில் கெளரவ கர்னல் பதவி வழங்கப்பட்டிருந்தால், அதை என்னைப் போன்றவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

வெறும் இரண்டே படங்களில் ராணுவ அதிகாரியாக நடித்து விட்டு, அவற்றில் ஒரு சில பிஸ்கோத்து தீவிரவாதிகளை மட்டும் டம்மி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மோகன்லாலுக்கு கொடுக்கும்போது, என்னால் விம்மி அழாமல் இருக்க முடியவில்லை!

காரணம்...??!!???

சினிமா உலகில் கால் வைத்ததிலிருந்தே, ஏறத்தாழ அனைத்துப் படங்களிலும் ராணுவ அதிகாரியாக / போலீஸ் அதிகாரியாக நேர்மையாக நடித்தவரும், கன்னியாகுமரியிலிருந்து, காஸ்மீரு வரை அத்தனை தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்றும், உயிருடன் பிடித்தவருமான நமது புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்தை, இந்திய ராணுவம் கெளரவிக்காதது ஏன்?

விஜயகாந்த் இடத்தை மோகன்லாலால் ஏணி வைத்தாலும் நெருங்க முடியாது என்பது மழலைகளுக்கும் தெரிந்த ஒன்று!

வெள்ளித்திரையில் காக்கிச் சட்டையும், மிலிட்டிரி ட்ரெஸ்சும் மாட்டிக் கொண்டு விஜயகாந்த் செய்த சாதனைகள் தான் எத்தனையெத்தனை?????

இந்த நேரத்திலே ஒரு சில சாதனைகளை சொல்ல வேண்டிய நிலையில் உள்ளேன். இது, இந்திய ராணுவத்தை மட்டுமின்றி, அமெரிக்க ராணுவத்துக்கும் விடுக்கப்பட்ட அறைகூவலாக எடுத்துக் கொள்ளலாம்!

1) கடந்த 30 வருஷத்துக்கும் மேலாக நமது பொதுச் சொத்தான சந்தன மரங்களைக் கடத்தியும், யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை எடுத்தும் கடத்தல் செய்து வந்தவன் சந்தனக்கடத்தல் காரன் வீரப்பத்திரன். அவனைப் பிடிக்க பல போலீஸ் அதிகாரிகள் போனபோது இரக்கமற்று அவர்களை சுட்டுக்கொன்று காட்டுராஜாவாக வாழ்ந்து வந்த கடத்தல் மன்னன் வீரபத்ரனை "கேப்டன் பிரபாகரனாக" தனியாக நின்று சண்டைபோட்டு உயிருடன் பிடித்து வந்தவர் யார்? மோகன்லாலா...? இல்லை நமது கேப்டன்!!!

2) இளம்பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, பின்பு அவர்களது உடல் உறுப்புக்களை எடுத்து வெளிநாடுகளுக்கு கடத்தல் செய்து வந்த கொள்ளைக் கூட்டத்தை மொத்தமாக "புலன் விசாரனை" செய்து தனியாக நின்று பந்தாடி கூண்டோடு அழித்து பல அவார்டுகளை குவித்தவரின் பெயர் என்ன மோகன்லாலா...? இல்லை நமது கேப்டன்!!!

3) பாகிஸ்தானில் இருந்து நமது நாட்டுக்குள் ஊடுருவி, அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்து, நமது நாட்டை சீரழிக்க நினைத்து, இறுதியில் பள்ளிச் சிறுவர்களைக் கடத்தி வைத்து தப்பிக்க நினைத்தார்கள் பயங்கரவாதிகள்... இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளாகி பிரதமரே முடிவெடுக்க முடியாமல் இருக்கும் போது, அரசாங்கத்து தெரியாமலே தீவிரவாதிகளின் இருப்பிடத்துக்குள்ளேயே சிங்கம் போல சென்று தீவிராவாதிகளை ஒழித்து, அதன் தலைவன் வாசீம் கானை இரண்டு காலாலேயே கழுதை போல் உதைத்து, அபார வீரன் "சேதுபதி IPS" என்று பெயரெடுத்தாரா மோகன்லால்..? இல்லை நமது கேப்டன்!!!

4) "மாநகரகாவல்" நிலையத்தில் இருந்து "திருமூர்த்தி"யாக வலம் வந்து நமது நாட்டின் இரண்டு பிரதமர்களை இரு வேறு தருணங்களில் குண்டு வைத்து கொல்ல, அயல்நாடுகளின் உத்தரவின் பேரில் செயல்பட்ட கூலிப்படையை கூண்டோடு கைலாயம் அனுப்பினாரே... அந்த மாவீரனா இந்த மோகன்லால். இல்லை நமது கேப்டன்!!!

5) தினமும் ஒருவேளை சோற்றுக்கு நமது மக்கள் அவதிப்படும்போது, மக்களுக்காக அராசங்கத்தால் வரும் ஒரு ரூபாய் ரேஷன் அரிசிகளை மொத்தமாக சுருட்டிய கூட்டத்தை, அவருக்கு தெரியாத அயல் மாநிலங்களில் உள்ள கடத்தல் தீவிரவாதிகளின் கூடாரத்துக்குள்ளேயே சென்று தவிடுபொடியாக்கி, நமது 100 கோடி மக்களின் பசியை தீர்த்து வைத்த 'தேவனா' இந்த மோகன்லால்..? இல்லை நமது கேப்டன்!!!

6) இந்தியாவின் எந்த ஓர் ஆட்சியாலும் அதிகாரத்தாலும் ஒழித்திட முடியாத லஞ்சத்தை, ஒற்றை 'ரமணா'வாக அவதராமெடுத்து மறுஒலிபரப்பு மலர்ச்சியை ஏற்படுத்திய அனுபவம் உண்டா மோகன்லாலுக்கு?... இல்லை நமது கேப்டனிடம் உண்டு.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தச் சாதனைகளின் எண்ணிக்கை மோகன்லாலின் வயதைத் தாண்டினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

அத்தகைய இந்திய தேசத்தின் காவலனான கோடம்பாக்கத்திலே வலம் வந்த கேப்டனை, ராணுவம் கெளரவிக்காமல் புறக்கணித்தது, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பெருங்களங்கம்!

இந்த நேரத்திலே ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன்... ஏ அமெரிக்க அரசாங்கமே... விழித்துக் கொள்... எங்கள் கேப்டனின் மகத்துவதை நீயாவது அறிந்து செயல்படு!!!!!

இப்படிக்கு,
கதறலுடன்,
கேப்டன் ரசிகன்.

 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
5yr4t
கேரளர்கள் முட்டாள்கள்

8 day ago | Report abuse

murugesan
காமெடிக்காக சிரிக்கலாம் ஆனால் நடிகர்கல்க்கு கவுரவ ரானுவ பதவி கொடுப்பது படு கேவலம்.

88 day ago | Report abuse

jai
ivlo padamum partha neer pavam

98 day ago | Report abuse

raja
பன மரத்துல வவ்வால்லா???? காப்டனுக்கே சவாலா???

189 day ago | Report abuse

thakshan
ஆஹா கிளம்பிட்டங்காய்யா

225 day ago | Report abuse

Razvi
அவகளோட இம்பூட்டு படங்களை பார்தீர்களாக்கும். ஹையோ ஹையோ!!

229 day ago | Report abuse

s
அ.....................

242 day ago | Report abuse

babu
i

244 day ago | Report abuse

navani
Beware A bit hard though!! Check out the following facts:- 1. Chief Justice of India is from Kerala 2. Indian Foreign Secretary is from Kerala 3. Indian Defense Minister is from Kerala 4. Chief of "Chandryaan' , the Indian Space programme is from Kerala 5. Chief Security Advisor to the Prime Minister is from Kerala 6. Chief of the new Federal Investigation Agency is from Kerala 7. Principal Secretary to Prime Minister is from Kerala 8. The only Indian to contest for the UN Secretary General's Position is from Kerala. 9. The chief of Staff for Security to UN Secretary General is from Kerala 10. Kerala is the only 100% literate State in India . 11. Kerala was rated as the most baby friendly state with the lowest infant mortality rates and the best Health Care Model by UN. 12. The last Indian representative to the Miss Universe contest was also a Keralite

244 day ago | Report abuse

Rajesh
whether it is comedy or not... it is true, Mohanlal just act only 2movies, he get because of A.K.Antony.........these people are very good relationship, but us...........shame to our tamil people...........

244 day ago | Report abuse

manjula
இது தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகம். கேப்டன் அவர்கள் தமிழ் மக்களூக்கு நன்கு உதவி சேய்திருகின்றார். இது மத்திய அரசுக்கு புரியாது.

244 day ago | Report abuse

Jana
(Read in Thoranai style) vidupa vidupa.... captaina adikarathum, vikatana kadikarathum... sagamjam thane

245 day ago | Report abuse

Alex
இது காமெடியா இல்ல சீரியஸா, கொஞ்சம் விளக்கம் தேவை

245 day ago | Report abuse

Amaravathipudur Premnath, Italy.
ராணுவத்தில் இது போன்ற கவுரவப் பதவிகள் ராணுவத்திற்கே உண்டான கம்பீரத்தையும், மரியாதையும் குறைக்கவே வழி வகுக்கும். இது போன்ற பதவிகள் கொடுப்பது தேவையில்லாத ஒன்று. இவர்களால் நாட்டுக்கு என்ன பயன்? இந்தப் பதவியால் ராணுவத்திற்குத்தான் என்ன பயன்?

245 day ago | Report abuse

gurusamy manivannan
kalakkal....

245 day ago | Report abuse

sudhakar
I kept laughing laughing laughing for a long time after very long time. Man I love this article, really superb.

245 day ago | Report abuse

Raja
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் - நாராயணன். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் - அந்தோணி. இந்தியாவின் வெளியரவுச் செயலாளர் - மேனன். இன்னும் எண்ணற்ற கேரளா செயலாளர்கள் டில்லியில் உள்ளனர். இவர்களுக்குள்ள ஒற்றுமை - கேரளா

245 day ago | Report abuse

vira
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ

245 day ago | Report abuse

Mava
தெலுங்குக்கு பாலகிருஷ்ணா , தமிழுக்கு நம்ம விசயகாந்து!!!!

245 day ago | Report abuse

pongiannan
Please take a look at these two video below without fail Mr.கதறலுடன்,கேப்டன் ரசிகன்.After seeing these two video also do you want the award for captain??? http://www.youtube.com/watch?v=sEJ0p3o1rgI http://www.youtube.com/watch?v=vWNzScsO8VM

245 day ago | Report abuse

Deenadayalan
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ....

245 day ago | Report abuse

புனா கானா ரசிகன்.
இது இந்தியாவிலுள்ள மலையாளிகளின் ஆதிக்கத்தையேக் காட்டுகிறது. இதைக் கண்டித்து முதல்வர் கலைஞர் அவர்கள் பிரதமருக்கு கடிதம்.... வேண்டாம் கடிதாசியாவது எழுதலாம். இப்படிக்கு, புனா கானா (அதாங்க புரட்சிக் கலைஞரின்) நொந்த ரசிகன்.

245 day ago | Report abuse

Thiru
தமிழ் முட்டாள்களா! இது ஒன்றும் ஜோக் இல்லை. மோகன்லால் சாதித்தது என்ன? எதன் அடிப்படையில் அவருக்கு வழங்கியிருக்கிறார்கள்? முதலில் தமிழன் என்ற உணர்வோடு இரு. இல்லையென்றால் ஓடிப்போ! தமிழ்னாட்டில் இருக்காதே. நமக்குள்ளே ஒருவரையொருவர் காலைவாரிவிட்டுத்தான் இப்படியிருக்கிறோம். இலங்கை தமிழர்கள் கூண்டோடு படுகொலை செய்யப்பட்டார்களே, முட்டாள்களே!!!!!!!!

245 day ago | Report abuse

Thiru
கௌரவ ராணுவ கர்னல் பதவி ஏன் மற்றும் எதற்கு கொடுக்கப்படுகிறது? மோகன்லால் ராணுவ அதிகாரி வேடம் போட்டு நடித்ததிற்கு கொடுக்கப்படுகிறதா? இல்லை அவர் ஏற்கனவே ராணுவத்தில் பணிபுரிந்துயுள்ளாரா? யாராவது அதை விளக்கி கூறவும்

245 day ago | Report abuse

Marty
Wonderful comedy page! Please write more articles like this. It takes away all the worries.

245 day ago | Report abuse

gannu
haahha, enna kodumai sarvanan ithu

245 day ago | Report abuse

Vani
வயிறு வலிக்க சிரித்தேன்

245 day ago | Report abuse

Neppoleon
இப்படி ஒரு வஞச புகழ்ச்சியை எங்கள் கம்பெனி மீட்டிங்கில் கூட கேட்டதில்லை. ஆனாலும் மலையாளி மலையாளிதான் என்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சிதான் இது. தமிழனுக்கு ஆடத்தெரியும், பாடத்தெரியும் குறிப்பாக வாய்கிழிய பேசத்தெரியும். ஆனால் ஆட்டுவிக்கவோ அல்லது எல்லோரையும் (நம்மை பற்றி) பேசவைக்கவோ தெரியாது. ஏன் என்றால் நாம் மற(ட) தமிழர்கள்?!

245 day ago | Report abuse

siva
சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கு.............பக்கத்தை நிரப்ப செய்தி கிடைக்கலியோ !

245 day ago | Report abuse

Sakthi
ரொம்ப நாளைக்கு அப்புறம் வயிறு வலிக்க சிரித்தேன்...

245 day ago | Report abuse

Vasu
இது என்ன கூத்து?

245 day ago | Report abuse

JK
Wait a second guys. When I first read this story from some other news media, my immediate reaction was why not Vijayakanth because as this post narrates, he acted many police officer roles than anyone in Indian cinema. he should deserve this award too. I'm not a fan for both actors but it was my immediate reaction to this news!

245 day ago | Report abuse

Siva
கேப்டன் ரசிகனுக்கு ரொம்ப குசும்புதான். நக்கலுக்கு அள‌வே இல்லயா.

245 day ago | Report abuse

cidi
அட முட்டாளே, சினிமாவில் போலீஸ் அதிகாரியாக நடித்தால் இந்திய இராணுவத்தில் பதவி கொடுக்கப்படும் என்று உனக்கு யார் சொன்னது. ஒரு துறையில் பலகாலம் செய்த சேவைக்காக கொடுக்கப்பட்ட கெளரவ பதவி. உன் கேப்டன் இன்னும் அந்த அளவிற்கு பக்குவபடவில்லை. உன் தலைவன் அவன் வாழ்வதற்கான வழியை தேடிக்கொண்டான். நீ உன் குடும்பம் வாழ்வதற்க்கான் வழியைப் பார். இல்லையென்றால் கோடம்பாக்கத்தில் குப்பைதான் அள்ளிக் கொண்டிருக்க வேண்டும்.

246 day ago | Report abuse

thiruma
அய்யோ அய்யோ ஒரே தமாசு, இப்படியெல்லாம் எழுத ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

246 day ago | Report abuse

Karthik Jeeva
Yenna pannaradhu namma Nattoda Ranuva Mandiri Mallu thaney , adhan oru Mallukku kuduthitanga. Namma Captain Jeyichu Parliament poyi idhukku oru mudivvvu kattamma vida mataru. Yenga Captainnukey Kannaka pathi sollu tharrengala. Moganlalu theriyumma indha nattulla yethanai Ranuva veerargal iruukanagannu, namma captain kettu parrungaya, oru culu kudutha podhum poondhu vilayaduvarraaaa.

246 day ago | Report abuse

Shahul
துப்பாக்கியில் இருப்பது ஒரு குண்டு, சுடவேன்டியது இரண்டு பேர் அதுவும் மதிலுக்கு மறுபுறம் முகத்தைக் கூட பார்க்க முடியாத தீவிரவாதிகள்! சுட்டுருவாருல்ல எங்க கேப்டன்! எப்படி? மதிலை நோக்கி சுட்டு குண்டு மதிலுக்கு அருகில் செல்லும் பொழுது ஒரு கத்தியை தூக்கி குண்டின் மேல் எறிந்து அந்த குண்டு இரண்டாக பிளந்து மதிலுக்கு அந்தப் பக்கம் நிற்கும் இரண்டு தீவிரவாதிகளையும் கொன்ற்றுமுல்ல! அதான்யா கேப்புடன்! ஆவ்வ்வ்வ்ங்! இப்படிபட்ட கேப்புட்டனுக்கு இந்த பதவி கொடுக்காமல் மோகன்லாலுக்கு கொடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோமுங்க! ஆமாங்க.

246 day ago | Report abuse

venkates
mohan lal is an actor, but vijayakanth is a hero ( once upon a time) now he is a joker (in politics)so that is a difference.vikatan please dont waste your page & our time for publish like this stupid things.

246 day ago | Report abuse

blue
அதெல்லாம் சரி. விஜய்காந்த் முகம் ஏன் நாளுக்கு நாள் வீங்கிக் கொண்டே போகிறது?

246 day ago | Report abuse

AN
இதற்கு பெயர்தான் நக்கலோ.......?

246 day ago | Report abuse

siva
கேப்டனை தொட்டா கரண்ட்டுக்கெ ஷாக் அடிக்கும் தெரியுமா?

246 day ago | Report abuse

ANAND
கருமமய்யா... மோகன்லாலின் தரத்தை விஜயகாந்தோடு ஒப்பிட எப்படியய்யா உமக்கு மனது வந்தது... என்னதான் கிண்டலாக இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்ள கொஞசம் கஷ்டமாகத்தான் உள்ளது... 'கீர்த்தி சக்ரா'படத்தையாவ்து குறைந்த பட்சம் பார்த்தபின் இந்த கடிதத்தை பிரசுரத்திருக்கலாம்...

246 day ago | Report abuse

kumar
இதுதான் வஞ்ச புகழ்ச்சி

246 day ago | Report abuse

thalai ezhuthu
காசு வாஙகிட்டு டைரக்டர் சொல்லுற‌படி நடிகிற‌வன் தான் மாவீரனா

246 day ago | Report abuse

Santhiya
Hilarious!

246 day ago | Report abuse

Senthil
Yappa, super letter!

246 day ago | Report abuse