| |
- கரன், கேரியர் கைடன்ஸ்
ரெடி, ஸ்டெடி, ஸ்டார்ட்!
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்காக மே 6-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது!
மாணவன் ஆசிரியர் ஆக...
பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் தேர்வு மற்றும் விரிவுரையாளர் தகுதித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மே 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.ugc.ac.in
ஆன்லைன் கேட்!
ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களின் மேனேஜ்மென்ட் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நடத்தப்படும் கேட் தேர்வுகள் இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே நடத்தப்படும். கடந்த 33 ஆண்டுகளாக ஒரே நாளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, இனிமேல் ஆன்லைன் மூலம் 10 நாட்களுக்கு நடத்தப்படும்!
இன்ஜினீயர்களுக்கு கடல் என்ட்ரி!
இந்தியக் கடற்படையில் தொழில்நுட்பப் பிரிவில் அதிகாரி நிலையில் உள்ள பணியிடங்களில் சேர விரும்பும் பி.இ., பி.டெக்., படித்த 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மே 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.nausena-bharti.nic.in
இந்தியன் வங்கிப் பணி!
இந்தியன் வங்கியில் 700 கிளார்க் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறுகிறது. இப்பணியில் சேர விரும்பு பவர்கள் மே 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.indianbank.in
மறக்காதீங்க!
பிலானியில் உள்ள பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் (பிட்ஸ்) மாணவர்களை அனுமதிக்கும் பிட்சாட் நுழைவுத் தேர்வு மே 9-ம் தேதி நடத்தப்படுகிறது!
|