Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
   
   
நீங்க, நல்லவரா ? கெட்டவரா ?
 

- கோமதிநடராஜன்

நல்லவனையும் கெட்டவனையும் அளக்க,
யாரேனும் ஓர் உபகரணம்
அறிந்து வைத்திருக்கிறார்களா?
தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
அதுவரை - நான், என் அளவுகோலைக் கொண்டு,
அளந்ததைச் சொல்லுகிறேன்.

நக்கலையும் நையாண்டியையும்
ஆண்டுகள் பல அலுக்காமல் கேட்டால்,
நீங்கள் நல்லவர்.

பொறுமை இழந்து பொறுமலைக்
காட்டினால், நீங்கள் கெட்டவர்.

பத்துலட்சத்தை விட்டுக்கொடுத்தால்
நீங்கள் நல்லவர்.

உரிமையான ஒன்றிரண்டு ஆயிரத்தைக்
கண்ணியமாய்க் கேட்டால்
நீங்கள் கெட்டவர்.

சிலாகித்துக் கொண்டே இருந்தால்
நீங்கள் நல்லவர்

சிந்திக்கத் தொடங்கினால்
நீங்கள் கெட்டவர்.

ஏமாந்து கொண்டே இருந்தால்
நீங்கள் நல்லவர்.

ஏன்? எப்படி என்று கேட்டால்
நீங்கள் கெட்டவர்!

நமக்குள்ளே
நல்லவரும் இல்லை கெட்டவரும் இல்லை.
எதிராளியின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்,
ஆக்குகிறது நம்மை,
நல்லவராகவும் கெட்டவராகவும்.
ஆகவே, அச்சம் கொள்ளாதீர்கள்.

எதிராளி, நல்லவரானால்
நாமும் நல்லவரே.
நம்மை,அணுகுபவர் கெட்டவரானால்
நாமும் கெட்டவரே!

 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
முஹம்மது பைரோஸ் கான்
நமக்குள்ளே நல்லவரும் இல்லை கெட்டவரும் இல்லை. எதிராளியின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும், ஆக்குகிறது நம்மை, நல்லவராகவும் கெட்டவராகவும். சூழ்நிலைதான் நம்மை மாற்றுகிறது அருமையான கருத்து ,வாழ்த்துகள்

303 day ago | Report abuse