Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
   
   
எண்ணங்களின் பயணத்தில்....
 

 

- இப்னு ஹம்துன்

போவதும் வருவதும்
பொதுவாய் மரபு
ஆவதும் அழிவதும்
அன்றாட இயல்பு.

எண்ணங்களின் பயணத்தில்
இயங்குகின்ற மனது.
வண்ண வண்ண கனவுகளே
வாழ்க்கைக்கு விருந்து.

ஆசையில் வருவதெல்லாம்
அடுத்தவர் 'இடம்' தான்
ஓசையறும் சிந்தனையில்
உலகமும் மடம் தான்.

பிறப்பதும், பின்னொரு நாள்
இறப்பதும்; இடையிலே
சிறப்புகள் தேடித்தேடி
செல்வதுவும் பயணந்தான்.

எல்லாப் பக்கத்திலும்
இருக்கலாம் பாதைகள்
வல்லோன் வகுத்தாற்போல்
வாய்ப்பதுவே வழிப்பாதை.

வாய்த்ததொரு வாகனத்தில்
வழியெங்கும் கோரிக்கை
வாட்டமின்றி சென்றாலே
வாழ்க்கை கேளிக்கை.

கயிறுகளாய் பாசபந்தம்;
கட்டப்பட்ட கைகால்கள்.
வயிறுக்காய் நகர்ந்தாலும்
வாழ்நாள்கள் உயிர்பூக்கும்.

'நிலை'யில்லாக் காலம் தான்
நதியாகப் பாய்ந்து வரும்
விலையில்லா நேரத்தை
விதியென்று தள்ளாதீர்.

தாகத்தை அதிகரிக்கும்
தண்ணீரும் இதுவே தான்
ஏகதேச அறிவுரையோ
'எல்லாம் கடந்து போகும்'.

காற்றெங்கும் இறக்கைகள்
கைகளாய் பரிணமிக்கும்
ஆற்றலுள்ள மனிதருக்கு
அனைத்துமே பக்கந்தான்.

 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
பந்தர்.அலி ஆபிதீன்.
'///நிலை'யில்லாக் காலம் தான் நதியாகப் பாய்ந்து வரும் விலையில்லா நேரத்தை விதியென்று தள்ளாதீர்./// நேரம் சரியில்லை என சலித்துக்கொள்பவர்களுக்கு, நல்ல சாட்டையடி வரிகள்

342 day ago | Report abuse

ஷாஜஹான் - மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து..
//எண்ணங்களின் பயணத்தில் இயங்குகின்ற மனது. வண்ண வண்ண கனவுகளே வாழ்க்கைக்கு விருந்து// ஆம்.. இப்படி இக்கரைக்கு அக்கறை பச்சை என்ற நினைவிலேயே வாழ்கிறோம்..அவைதான் வாழ்க்கையை ரசமாக்குக்கின்றன.. கனவுகள் இல்லையேல் கசந்துபோகும் நிஜ வாழ்வு //ஆசையில் வருவதெல்லாம் அடுத்தவர் 'இடம்' தான் ஓசையறும் சிந்தனையில் உலகமும் மடம் தான்.// சிந்திப்பவர்க்கு எவ்வளவோ விஷயங்கள் இதில் இருக்கிறது. நிதர்சனம் என்னமோ யாருக்கும் எந்த இடமும் நிரந்தரமில்லை. //கயிறுகளாய் பாசபந்தம்; கட்டப்பட்ட கைகால்கள். வயிறுக்காய் நகர்ந்தாலும் வாழ்நாள்கள் உயிர்பூக்கும்// அழகாய் சொன்னீர்கள் நண்பா.. இதைவிட எளிமையாய் சொல்ல இயலாது.. யாருக்காக இது எல்லாம் என நினைக்கையில் பறந்தோடும் எல்லா துயரங்களும் //தாகத்தை அதிகரிக்கும் தண்ணீரும் இதுவே தான் ஏகதேச அறிவுரையோ 'எல்லாம் கடந்து போகும்'.// மற்றுமொரு அறிவுறுத்தியிருக்கிறீர்கள். தேடல் ஒருபோதும் முடிவதில்லை என்று.. தொடரட்டும் உங்கள் எண்ணப் பயணங்கள்.. பயணங்களுக்குதான் முடிவேயில்லையே

343 day ago | Report abuse