|
- கார்க்கி

மின்காந்த அலையாக
வரவேற்பறைக்கு வந்தவள்
விழிகாந்த அலையால்
மனவறைக்குள் நுழைந்தாள்
அடுக்கி வைத்த
அடுக்குமாடி குடியிருப்புகள்
எதிர்பார்த்தவளுக்கு
புறநகரில்
பரந்து விரிந்துகிடக்கும்
காலி மனைகளாக இருந்த
இதயம் பிடித்துவிட்டது.
"அய்யோ நம்பவே முடியல"
"ஒரு ஹாய் சொல்லுங்க"
"எங்க அண்ணன் உங்க ஃபேன்"
டெம்ப்ளேட் பேச்சுகளின்றி
"பிடிச்சிருக்கு" என்றதை ரசித்தாள்.
பதிலாய் பாடினாள்.
பழக்க தோஷம்.
"அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி..."
|