Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
   
   
எல்லோருக்கும் நல்லவனாக இரு
 

 

- கோமதி நடராஜன்

எல்லோருக்கும் நல்லவனாக இரு என்று
எல்லோரும் சொல்கிறார்கள்.
இருந்துதான் பார்ப்போமே.
விழுந்தவனைத் தூக்கி நிறுத்தித்
தூணாகத் துணை நின்றேன்.
அவனைத் தள்ளிவிட்டவனுக்கு நான்
தப்பானவனானேன்.
அடிபட்டவனை அரவணைத்து
ஆறுதல் கூறி ஆற்றினேன்.
அவனை,அடித்தவனுக்கு நான்
ஆகாதவனானேன்
அழுதவனை அருகிலிருத்தி
விழிநீரைத் துடைத்தெறிந்தேன்.
அவனை அழவைத்தவனுக்கு நான்
அதிகப்பிரசங்கியானேன்.
ஒரே காரியத்தினால், நான்,
ஒருவனுக்கு வேண்டியவனானேன்
மற்றொருவனுக்கு வேண்டாதவனானேன்.
'எல்லோருக்கும் நல்லவனாக இரு'
எல்லோரும் சொல்கிறார்கள்.
ஒரு நாள் -
அடித்தவன் அடிபட்டு நின்றான்,
படட்டும் என்று ஓடவா?
பக்கத்தில் சென்று தேற்றவா?
அழவைத்தவன் அழுது நின்றான்
அழட்டும் என்று விடவா?
அள்ளி அணைத்து ஆற்றவா?
தள்ளிவிட்டவன், விழுந்து கிடந்தான்
கிடக்கட்டும் என்று போகவா?
கிட்டே சென்று தூக்கவா?
இவர்களுக்கு நண்பராகவா?
அவர்களுக்குப் பகைவராகவா?
இயலாத ஒரு காரியத்தை,எல்லோரும்
மிக எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள்
'எல்லோருக்கும் நல்லவனாக இரு'

 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
Ramalakshmi Rajan
அருமையான கதை. பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக உன்னதமான முடிவு! "எனது நம்பிக்கை வென்று விட்டது. நீ இதை படித்துக் கொண்டு இருக்கின்றாய்." எனும் உறுதியான நம்பிக்கையோடு உருக்கமான முதல் கடிதம். "இரண்டு வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். " என அந்த நம்பிக்கையைத் தகர்க்காத... உயர்ந்த உள்ளத்தைக் காட்டும் அடுத்த கடிதம். வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.

372 day ago | Report abuse