|
- S.A. நவாஸுதீன்
ஜடத்திலிருந்து தோன்றி
ஜடத்திற்கு உயிர் தரும்
கலையில் ஒளிரும் உயிரம்சம்
மனித மனத்தை
ஸ்பரிசிக்கும்
ஸ்பரிசத்தின் பயணம்
காலத்தில் கலைக்கு வித்திடும்போது
கலை கலையாய் இல்லையேல்
அதுவும் ஜடமாய்

உறங்கும் உன்னை
அருகில் வந்து
உற்றுப் பார்க்கிறேன்
உடன் விழிக்கிறாய்
இப்படித்தான்
ஓவியமும் உயிர் பெறுமோ
புரியாத ஸ்பரிசம் இது எனக்கு
உனது உயிரின் திரையை
திறந்து உடுத்தினேன்
உன்னை.
அது என்னுள்
இன்னும் நிர்வாணமாய்
என் உடல் கொண்டு மூடி
திரையிட்டேன்
நான் இப்போது நிர்வாணமாய்
|