அடிமை இருளில் மூழ்கியிருந்த பாரத நாட்டில், வங்க மாகாணத்திலே 1861-ம் ஆண்டு, மே மாதம் 7-ம் தேதி ரவீந்திரர் தோன்றினார். நாடு முழுவதும் நான்கறிந்த மகரிஷி தேவேந்திரநாத தாகூரின் 14-வது குழந்தையாகப் பிறந்தவர் ரவீந்திரர். அறிவும் கலையும் குலவும் மகரிஷியின் குடும்பத்தில் பிறந்த ரவிக்கு இளமையிலேயே பாடல்கள் இயற்றும் பழக்கம் ஏற்பட்டது...
"...கடிதம் வெறும் பரிமாற்றம் மட்டுமே இல்லை. அது நாம் இன்னொருவரை நேசிக்கிறோம் என்பதன் சாட்சி. ஒருவகையில் கடிதம் நம் மனதின் குரல். நேரில் சொல்ல முடியாத தவிப்பைக் கடிதம் சொல்லிவிடும். கண்ணீர்க் கறை படிந்த கடிதங்களும், பிரிவின் அழியாத மணமுள்ள கடிதங்கள், தற்கொலை செய்துகொண்டவனின் கடிதங்கள், முதல் காதலைச் சொன்ன கடிதங்கள் என ஏதேதோ...
தெய்விகத் தொடர்பு ஏற்படும்போதுதான் உண்மையான இன்பம் பெறமுடியும் என்று ஆங்கிலக் கவிஞன் கீட்ஸ் கண்டான். அதே தத்துவத்தை பாரதக் கவிஞர் தாகூர் தனது 'காதல் பரிசு' என்னும் நூலிலே வடித்துக் காட்டிவிட்டார். காதலுணர்ச்சியின் எழிலுருவம் எழக் காரணம் என்ன என்பது கவிஞருக்கே தெரிந்த ஒன்று. தாஜ்மகால் என்னும் அழகுருவம் நிலைக்க ஷாஜகான் செய்த செயலை, உள்ள அரங்கிலே பாராட்டும....
விஸ்வேம்பரர் புகழ்பெற்ற வைத்தியர். அவர் பல்லக்கில் ஏறி சப்தகிராமம் என்ற ஊருக்கு போய் கொண்டிருந்தார். குளிர்காற்று வீசி கொண்டிருந்தால் வைத்தியர் முரட்டுக் கம்பளியை போர்த்தியிருந்தார். வைத்தியரின் உதவியாளரான சம்புவும் பல்லக்கின் கூடவே நடந்து சென்றான். அவன் கையில் நீண்ட தடியன்று இருந்தது. பல்லக்கின் மேலே மருந்து பெட்டியன்றை கயிற்றால் இறுக்கி கட்டியிருந்தார்கள்...
நோபல் அறிஞர் ரவீந்திரநாத் தாகூரின் படைப்புலகம் குறித்து இன்றைய இளைஞர்களுக்கு விழிப்பு உணர்வு அவசியம் என்று அறிஞர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் போற்றுதலுக்குரிய இலக்கியப் படைப்பாளிகளுள் ஒருவரான ரவீந்திரநாத் தாகூரின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை...
"தேசிய கவி ரவீந்திரநாத் தாகூரின் ஓவியங்கள் தனி மனிதனையும், உலகையும் ஒன்றிணைக்க வல்லவை."
- பிரதமர் மன்மோகன் சிங்
"நட்பின் ஆழம் என்பது பழகத் தொடங்கிய கால அளவைப் பொருத்ததல்ல!" -தாகூர்