கொண்டாடுவோம் வாருங்கள்... உலக தண்ணீர் தினம்!

- நீச்சல்காரன்

மார்ச் 22... உலக தண்ணீர் தினம்.

நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், 1993 ஆம் ஆண்டு தொடங்கி, உலக நாடுகள் முழுவதும் கொண்டாட்டு வருகிறது, இந்த விழிப்பு உணர்வு தினம்.

2010 ஆம் ஆண்டின் கருப்பொருளாக, "சுத்தமான நீர் சுகாதார வாழ்வு" என்ற வாசகம் உறுதிமொழியாக ஏற்கப்படுகிறது.

நம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் இயன்றவரை நீரை சிக்கனமாக பயன்படுத்துகிறோம் என்றே நம்புகிறேன். ஆனால், அதையும் மீறி நாம் செய்ய வேண்டிய கடமை என்றால் அது, 'நீரை மாசுபடாமல் காப்பதே'.

உலக தண்ணீர் தினம் என்பது ஆங்காங்கே நடக்கும் விழிப்பு உணர்வு பிராசரங்கள் போன்ற ஏதோ ஒரு நிகழ்ச்சியாக நினைக்க வேண்டாம். உண்மையில் இது ஒரு கொண்டாட்டமே.

வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுவைத்துப் போகும் ஒரு சொத்துக்காக நாம் கட்டாயம் கொண்டாட வேண்டும்.

நவீன இணைய யுகத்தில் இதோ சில கொண்டாட்ட வழிகள்...

உங்கள் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பயன்பாட்டை ஒரு வாரத்துக்கு நன்கொடையாக கொடுக்கலாம். உங்கள் கணக்குக்கு எந்த ஆபத்தும் வராது. இதன் மூலம் ஒரு வாரத்துக்கு தானாக டிவிட்டுகள் உங்கள் பக்கத்தில் தோன்றும். உங்கள் வாயிலாக நண்பர்களுக்கும், அவர்களின் மூலமாக பலருக்கும் என ஓர் இணைய சமுகத்தை தண்ணீர் விழிப்பு உணர்வு டிவிட்டுகள் போய்ச் சேரும்.

மேலும் விபரங்களுக்கு... http://oneweekforwater.org/countdown/

மார்ச் 22 முதல் 26 வரை எந்த நேரத்திலும் நீங்கள் இந்த விழிப்பு உணர்வு டிவிட் அல்லது பேஸ்புக்கை விட்டு ரிவோக் பட்டன் மூலம் வெளிவர முடியும். இந்த பங்களிப்பில் நீண்ட நாட்கள் இருக்க விரும்புவோர், அதிகபட்சம் ரொஉ மாத காலம் நன்கொடையாகக் கொடுக்கலாம். அதன் விவரத்துக்கு... http://rt.water.org/

*

இணையத்தில அடுத்து உள்ள முக்கியமான சேவை தளம் 'பெட்டிஷன் ஆன்லைன்'. இங்கே உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரைக் காப்போம் எனற ஒரு பெட்டிஷனை வடிவமைத்துள்ளனர்.

இந்த பெட்டிஷனில் பதிவு செய்து நாமும் ஓர் உறுதிமொழி எடுக்கலாம். இங்கே பலரும் கையெழுத்திட தொடங்கிவிட்டனர். இதுகுறித்த முழுமையான தகவல் அறிய...http://www.thepetitionsite.com/takeaction/997220151

*

தண்ணீர் பற்றி பல தகவல் தளங்களை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் திரட்டியுள்ளது. அதன் தொகுப்புகளை அறிய... http://www.unesco.org/water/water_links/

*

உங்கள் பகுதியில் நடக்கும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். இது தொடர்பான தகவல்களை மற்றவருக்கும் சொல்லுங்கள். சார்வதேச அளவில் நடக்கும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியின் தொகுப்பு இந்த ஆண்டின் தண்ணீர் தின அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்தத் தளம்... http://www.unwater.org/worldwaterday/events.html

இதில் நீங்கள் தவறாமல் படிக்க வேண்டிய பக்கம்... http://www.unwater.org/worldwaterday/faqs.html

*

இன்றைய இணையச் சூழலில் தமிழ் வலைப்பதிவு உலகும் பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்வுகளுக்கு நல்ல முறையில் பங்களிப்பை அளித்து வருகிறது. இந்த ஆண்டு தண்ணீர் தினம் தொடர்பாக பலரும் தங்களது வலைப்பதிவுகளில் பல கருத்துகளையும் அரிய தகவல்களையும் பதிவு செய்துள்ளனர்.

கூகிள் ப்ளாக் தேடல் செய்தியோடை வழியாக திரட்டப்பட்டுள்ள அந்த இடுகைகள் காண விரும்புவோர் உலவ வேண்டிய இடம்... http://www.google.com/reader/shared/neechalkaran

*

தற்போது உலக நாடுகளில் இருக்கும் சொற்ப நீர் ஆதாரங்கள் கூட கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 40 ஆயிரம் கோடி டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. இதனால், நிலத்தடி நீரும் விஷமாகி வருகிறது. இந்த அபாயத்தை கூட உணராமல், நீர் ஆதாரங்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இப்போது, உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால், இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். மக்களும் மாண்டுபோகும் நிலைதான் ஏற்படும்.

உலகம் முழுக்க அன்றாடம் சுமார் 4,000 குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் நோய்த் தொற்றால் மட்டுமே இறக்கின்றன என்கிறது புள்ளிவிவரம்.

உலக தண்ணீர் தினம் கொண்டாடும் இவ்வேளையில், மக்கள் அனைவருக்கும் சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதற்கு நம்மால் இயன்ற வகையில் செயலாற்றுவோம்.

*

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.