Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
   
   
உன் முத்தத்தின் ஈரத்தில்...
 

 

- ப்ரியன்

இரட்டை கால்தடங்களை
எங்கு கண்டாலும்
மனம் நிரம்பிவிடுகிறது
கைக்கோர்த்து நாம் நின்றிருந்த
கணங்களால்!

மீன்கொத்திகளை
கேட்டிருக்கிறேன்;
உன் கண்கள்
கண்கொத்தி மீன்கள்!

தேவதைகளின்
உறைவிடம் விண் மட்டுமல்ல;
சில நேரங்களில்
எதிர் வீடும்!

உருண்டு திரண்டு
வழிய காத்திருக்கும்
உன் ஒற்றை கண்ணீர்துளியினுள்
உறைந்துவிடுகிறது என்னுலகம்!

கவிதை;
உன்னிதழ் சிந்தும்
எதுவும்!

நீ வழங்கிய
வலிகளுக்கு
ஈடாய்
என்னிடம் கவிதைகள்!

மச்சப்புள்ளிகளை இணைத்து
இறைவன்
இட்ட கோலம் நீ!

உன் முத்தத்தின்
ஈரத்தில்
காய்ந்துவிடுகிறது
என் காயம்!



சந்தித்த போது
படபடத்து கொண்டும்
பிரிந்திருக்கும் போது
பேசிக் கொண்டும்
நம் இதயங்கள்!



வா,
காதல் பூஜையில்
நம்மை பூவாய்
சமர்ப்பிப்போம்!



 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
ஜெ.நம்பிராஜன்
இழவு நாடு எல்லா வீடுகளையும் போன்று விடிவதில்லை இழவு வீட்டின் இரவு தூங்கா விழிகளுடன் இழப்பின் வலியுடன் கூடிய விடியாத இரவு அது பிரிந்த நண்பர்களையும் பேசாத சொந்தங்களையும் அழைத்து வந்து விடுகிறது மிக எளிதாய்...ஒரு மரணம் எல்லோரும் சேர்ந்து வழியனுப்புவர் கண்ணீருடன் இறந்தவரை இவையெல்லாம் வழக்கமான மரியாதை மரிப்பவருக்கு... ஆனால் வழியனுப்ப எவருமில்லை அழும் உறவுகள் எல்லாம் அகதிகளாய் எங்கோ பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருக்கிறது ஒரு தேசம் பாஸ்பரஸ் குண்டுகளுக்கு அஞ்சி நித்தம் நூறு சடலங்கள் மொத்தமாய்...கொத்துக் கொத்தாய் சாவின் குறைந்தபட்ச மரியாதையும் அற்று மனிதம் மறந்த மரங்களாய் ரத்தத்தின் மிச்சங்கள் வேடிக்கை பார்க்கும் அண்டை நாட்டில் அமைதியாய் -ஜெ.நம்பிராஜன்

533 day ago | Report abuse

abisheca
வாழ்த்துக்கள்.............. தொடரட்டும்.................தொடர் கவிதைகள்.............. அபிசேகா

533 day ago | Report abuse

Ashwin
நல்ல கவிதைகள் நண்பரே.

534 day ago | Report abuse