Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
   
   
நமது பயன்பாட்டில் தமிழ் - 4
 

- ச.செந்தில்வேலன்

தொழில்நுட்பத் துறை இளைஞர்களுக்கு கூட இணையதளங்களில் பல்வேறு வலைப்பதிவுகள் மூலமாக தமிழிலேயே எழுதும் ஆர்வம் மிகுதியாகியிருப்பது மகிழ்வுக்குரியது.

ஆனால், நம்மால் ஐயமில்லாமல் எழுத முடிகிறதா?

"ல,ழ,ள", "ண,ந,ன", "ர,ற" போன்ற எழுத்துக்களை பயன்படுத்துவதை எடுத்துக்கொள்வோம்.

300 ரூபாயை எப்படிக் குறிப்பிடுவீர்கள்? முன்னூறு என்றா? அல்லது முந்நூறு என்றா?

முன்னூறு - முன்னே வரும் நூறையும், முந்நூறு - மூன்று நூறையும் குறிப்பிடுகிறது.

அதே போல "முன்னாள் (முன் ஒரு நாள் ) இதைப் போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது" என்பதற்கும் "முந்நாள் (மூன்று நாள்) இதைப் போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது" என்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளதே!

*******************************************************

பெரும்பாலானோர்க்கு எண்களைக் குறிப்பிடுவதில் ஐயம் வரத்தான் செய்கிறது.

எண்பது - 80
என்பது - என்று சொல்வது

எண்ணை - Number
எண்ணெய் - தேங்காய் எண்ணெய் ( வெண்ணெய் என்று குறிப்பிடுவது சரியா? )

************************************************************

தர னகர ணகர நகர வேறுபாடுகள் பற்றி கீழே தெரிந்து கொள்வோம்...

அன்னாள் - அவள்
அந்நாள் - அந்த நாள்

இன்னார் - இத்தகையர் (இன்னார் இனியார் என்று எழுதுவோமே)
இந்நார் - இந்த நார் ( இந்நார் இனியார் என்று எழுதினால் எப்படி இருக்கும்?)

************************************************************

மிழக அரசியலில் "சுவரொட்டிகளுக்கு" ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. சுவரொட்டிகளில், நம் கண்ணில் படுவனவற்றுள் "இவண் - செயலாளர் " என்பனவும் ஒன்று. சில சமயம் தவறாக "இவன் - கொ.ப.செ" என்று அச்சிடுவதும் நடக்கத்தான் செய்கிறது.

இவன், இவண் என்ன வேறுபாடு?

இவன் - இங்கே இருப்பவனை குறிப்பிடுவது
இவண் - இங்ஙணம் (மாற்றி எழுதினால் என்ன ஆகும்?)

ஈந்தாள் - கொடுத்தாள்
ஈன்றால் - பெற்றெடுத்தாள்

உண்ணல் - புசித்தல்
உன்னல் - நினைத்தல்

ஊன் - மாமிசம்
ஊண்- உணவு

கன்னி - குமரி
கண்ணி - கண்ணை உடையவள்

கான் - காடு
காண் - பார்

தின் - சாப்பிடு
திண் - வலிமை

தன் - தனது
தண் - குளிர்ச்சி

மனம் - உள்ளம்
மணம் - வாசனை

இது போன்ற னகர ணகர நகர வேறுபாடுகள் பற்றி பள்ளிப் பருவத்திலேயே படித்திருந்தாலும், இன்னும் ஒரு முறை தெரிந்து கொள்வது நல்லது தானே!

************************************************************

"என்னடா ரெடி ஆயிட்டியா?" என்று கேட்பது பழகிப்போன ஒன்று. ரெடியை தமிழாக்கம் செய்யும்போது "தயார்" என்று எழுதுவது வழக்கம். ஆனால் "தயார்" தூய தமிழ்ச்சொல் கிடையாது.

தயார் என்பது "ஆயத்தம்" என்ற தமிழ்ச்சொல்லில் பிறமொழிச்சொல் தான்.

இங்கே தயாரிப்பு, தயாரித்தல், தயாரிப்பாளர் போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்களா?

இதர அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும்...

அசல் - மூலப்பொருள்
பாக்கி - நிலுவை
ஜாக்கிரதை - கவனம்
தபால் - அஞ்சல்
பஞ்சாயத் - ஐவர் குழு
பட்டுவாடா - பகிர்ந்தளித்தல்
படுதா - திரச்சீலை
பந்தோபஸ்து - திட்டபடுத்திய ஒழுங்கு
பல்லாக்கு - சிவிகை
பஜாரி - வாயாடி
பதில் - மறுமொழி
பாத் - சோறு
பகாளாபாத் - தயிர்சோறு
பூரா - முழுதும்
பேஷ் - மிக நன்று
மஹால் - அரண்மனை
மாகாணம் - மாநிலம்
மாஜி - முன்னைய
முகாம் - தங்குமிடம்
முலாம் - மேற்பூச்சு
மைதானம் - திடல்
ரத்து - விலக்கு
லாயக்கு - தகுதி
வகையறா - முதலான
வாரிசு - உரியவர்
ஷோக் - பகட்டு

************************************************************

ணையதள பயனர்கள் அனைவருக்கும் விக்கிப்பீடியாவைத் தெரியாமல் இருக்காது. அனைத்து வகையான தகவல்களையும் தருவதால் இதற்குக் கட்டற்ற களஞ்சியம் என்று பெயரிட்டுள்ளார்கள்.

விக்கிப்பீடியாவில் அனைத்து மொழிகளிலும் கட்டுரைகள் வெளியிடப்படுவதும் நமக்குத் தெரிந்ததே!

இதில் தமிழில் எத்தனை கட்டுரைகள் வந்துள்ளன என்று பார்த்தால் நமக்குக் கிடைப்பது அதிர்ச்சியே. இதுவரை தமிழில் 18000 கட்டுரைகள் மட்டுமே வெளியாகியுள்ளன.

மற்ற நாட்டு மொழிகளில் எத்தனை கட்டுரைகள் வெளியாகியுள்ளன என்று பார்த்தால் கிடைப்பவை இதோ...

ஆங்கிலம் - 29 லட்சத்துக்கும் அதிகம்
பிரென்சு - 8 லட்சத்துக்கும் அதிகம்
செருமன் - 9 லட்சத்துக்கும் அதிகம்.
சுவோமி ( பின்னிஷ் ) - 2 லட்சத்துக்கும் அதிகம்
தெலுங்கு - 40 ஆயிரம்...

ஆங்கிலம், பிரென்சு, செருமன் போன்ற மொழிகள் உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுவது நமக்குத் தெரிந்ததே. ஆனால் பின்னிஷ் மொழியில் பேசுவோர் எண்ணிக்கை 50 லட்சம் பேர் தான். அதாவது சென்னை நகர மக்கள்தொகையை விடக் குறைவு.

பின்னிஷ் மொழி 700 ஆண்டுகள் வரலாறு கொண்டவையே! ஆனால் தமிழ்மொழி? தமிழ் மொழி இலக்கணம் பற்றிய நூலான தொல்காப்பியத்தை இயற்றியது 2000 ஆண்டுகட்கு முன்பு!

50 லட்சம் பேர் பேசும் "சுவோமி" மொழியில் 2 லட்சம் கட்டுரைகள் உள்ளன என்றால் 7 கோடிப்பேர் பேசும் தமிழ் மொழியில் எத்தனை கட்டுரைகள் இருக்க வேண்டும்?

பல துறைகள் பற்றியும் பதிவுகளை எழுத ஆரம்பித்திருக்கும் நாமும், இது போல களஞ்சியங்களுக்குக் கட்டுரைகளை எழுதலாமே! நம்மைத் தடுக்கும் காரணங்கள் எவை?

தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயமும், ஐயமுமே காரணம். ஐயத்தைப் போக்க நமக்கு வேண்டியது ஒரு நல்ல இலக்கண நூல்! அனைவரது வீட்டிலும் "WREN & MARTIN - GRAMMAR" நூல் இருக்கும் போது தமிழ் இலக்கணம் பற்றிய நூல் இல்லை என்றால் நன்றாகவா இருக்கும்?

************************************************************

மிழில் எழுதும் போது நமக்கு ஏற்படும் ஐயங்களில் குறிப்பிடத்தக்கவை "ர, ற" வேறுபாடு.

தந்தைக்கு மகன் மீது மிகுந்த "அக்கரை" என்று எழுதுவது சரியா? அல்லது "அக்கறைச்" சீமை அழகினிலே என்று எழுதுவது தான் சரியா?

அக்கரை என்றால் - அந்தக் கரை
அக்கறை என்றால் - கவனம்

இது போல இதர "ர, ற" வேறுபாடுகள் கீழே..

அரம் - ஒரு கருவி
அறம் - தருமம்

அரை - மாவாக்கு
அறை - வீட்டுப்பகுதி

ஆர - நிறைய
ஆற - சூடு குறைய

இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழே வா

உரை - சொல்
உறை - அஞ்சல் உறை

எரி - தீ
எறி - வீசு

கரி - அடுப்புக்கரி
கறி - காய்கறி

கருப்பு - பஞ்சம்
கறுப்பு - நிறம்

கரை - கடற்கரை
கறை - மாசு

கோருதல் - விரும்புதல்
கோறல் - கொல்லுதல்

சிரை - மயிரை நீக்கு
சிறை - சிறைச்சாலை

சொரிதல்- பொழிதல்
சொறிதல்- நகத்தால் தேய்த்தல்

பரந்த - பரவிய
பறந்த - பறந்துவிட்ட

பரவை - கடல்
பறவை - பட்சி

பாரை - கடப்பாரை
பாறை - கற்பாறை

பெரு - பெரிய
பெறு - அடை

பொரித்தல் - வறுத்தல்
பொறித்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்

பெரும்பாலானோர்க்கு இந்த வேறுபாடுகள் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்குப் பயனளித்தால் நல்லது தானே!

************************************************************

ரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும்...

இலாகா - துறை
உஷார் - விழித்திரு
உருமால் - தலைப்பாகை
கசாபு - இறைச்சி
குஷி - மகிழ்ச்சி
சபாஷ் - பலே, சிறப்பு
சொக்கா - உடை
ஜமக்காளம் - விறிப்பு
ஜல்தி - விரைவு
ஜவ்வாது - வாசனைப்பொருள்
ஜிமிக்கி - தொங்கட்டான்
ஜில்லா - மாவட்டம்
தகரார் - சண்டை
தமாஷ் - நகைச்சுவை
தர்பார் - அரசவை
தாலுகா- வட்டம்
பக்கா - நிறைவு
பஜார் - கடைவீதி
பைல்வான் - பலசாலி..

சோம்பேரி, சோம்பேறி.. எது சரி? "ல, ழ, ள" வேறுபாடுகள் அடுத்தக் கட்டுரையில்..!

முந்தைய அத்தியாயம் : நமது பயன்பாட்டில் தமிழ் - 3

 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
najeem

205 day ago | Report abuse

thamizhtharagai
மிகவும் அருமையான பகுதி இது. எழுத்தாளரின் பெயருடன் அவரைப் பற்றி ஓரிரு வரி எழுதலாமே!

214 day ago | Report abuse

Mutta Parotta
ஐயா, உங்களுடய தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் பகுதி எங்களுக்கு மிகவும் பயன் உடையதாக இருக்கிறது. சாதாரணமாக நாங்கள் செய்யும் தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டும் விதம் மிகவும் அருமை. உங்களது இனிய இத்தமிழ்ப்பணி என்றென்றும் தடையராது தொடர எங்களது மனம் நிறைய வாழ்த்துக்கள் . இப்படிக்கு - முட்டை பரோட்டா.

214 day ago | Report abuse

ravi
கண்ணி என்றால் கண்ணி வெடிதான்ஞாபகம்வருது.

214 day ago | Report abuse

Ravi, Dallas, USA
யப்பா! எனக்கு இன்னும் அந்த குழப்பம் வரவில்லை! அந்த அளவுக்கு மோசம் இல்லை என்றும் நினைக்கிறேன்!

215 day ago | Report abuse