Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
   
   
மையில்லாத கண்கள்
 

-ஆதிமூலகிருஷ்ணன்



அம்மா கூட இல்லாத
ஒரு மதிய நேரத்தில்
உன்னை வீட்டிற்கு அழைத்து வருகிறேன்
பயம் தெரிந்தது உன் கண்களில்
இங்கே விட்டுச்செல்ல
உன் கூந்தலில் எந்த மலர்களும் இல்லை
சிதறி விழ உன் கரங்களில் கண்ணாடி வளைகளும் இல்லை
நீங்கிச்சென்ற பின்னும் ஒலிக்கும் கொலுசுகளுக்கும்
உனக்கும் சம்பந்தமில்லை
சுவர்களில் தடயமிட்டுச்செல்ல உன் கண்களும்
மை தாங்கியிருக்கவில்லை
விரித்த கூந்தல்
குங்குமம் பாராத நெற்றி
இறுக்கும் ஜீன்ஸ் என மாடர்ன் காதலி நீ...
மறக்காமல்
என் கன்னங்கள் கொண்ட
லிப்ஸ்டிக் கறைகளையும் கூட அழித்துவிட்டேன்
அப்படியும் மாலையில்
வீடு திரும்பிய அம்மா கேட்டாள்
என்னடா மல்லிகை வாசம் வருது...

 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
goma
காதல் தடயங்கள் அத்தனையும் அழித்தாலும் மனமெல்லாம் வீசிக்கொன்டிருந்த மல்லிகை மணத்தை கன்டுபிடிப்பவளே அம்மா? யாரை வேன்டுமென்றாலும் ஏமாற்றி விடலாம் ஆன்டவனையும் அம்மாவையும் ஏமாற்ற முடியாது மகனே.

443 day ago | Report abuse