Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
   
   
சுதந்திரம்....
 

 

- தங்கராசா ஜீவராஜ்

விழிபிதுங்கி இருக்கிறேன் - என்
எண்ணங்களை
எழுத்துருவாக்கும் வழி தெரியாது

சந்தங்கள், அர்த்தங்கள் தவிர்த்து
நிறைய
யோசிக்கவேண்டி இருக்கிறது

எழுதத் தொடங்கும் ஒவ்வொரு கணமும்
ஆயிரம் கண்கள் - என் எழுத்தை
வெறித்துப் பார்ப்பதாய் ஒரு பிரமை

எப்படி வரும்?
ஈட்டிகளுக்கு நடுவில்
இயல்பான கவிதை

நாட்டு நடப்புகளை
எழுதத் தொடங்கையில்
வரண்டு கொள்கிறது – நா

நெஞ்சில் பொறுத்திருக்கிறது
எழுதி முடித்ததும்
இருப்பேனா? என்ற பயம்

பக்கங்கள் நிரப்புவது தவிர்த்து
என்ன சாதித்துவிட முடியும்
இருப்பதை எழுதாமல்

வெறுத்துப் போய்
எழுந்து சென்றேன்முடிந்திருந்தது பூசை
பூட்டிய கோயிலுக்குள் பிள்ளையார்

சலித்துப் போய் விசாரித்ததில்
திறந்திருந்தால்
திருடர் பயம் என்றார்கள்

கடவுளே என்று
எட்ட நின்று கும்பிடுகையில்
கைதாகி இருக்கும் ஒருவரிடம் - என்
ஆன்ம விடுதலைக்காய்
வேண்டுவது போல் இருக்கிறது.

எழுத்துக்கு மட்டுமல்ல –
என்னைப் பொறுத்தமட்டில்
எல்லாவற்றுக்கும்
தேவைப்படுவது போல் இருக்கிறது
சுதந்திரம்.

 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
maria manokaran
அடி பட்டது போலுள்ளது நெஞ்சு.சுதந்திர இலங்கையில் தமிழன் பட்ட துயர் எத்தனை பிறவிக்கும் மறக்க மூடியுமா? இழந்ததை மீட்க மீண்டும் ஒரு சோளன் கை கொடுக்க வேண்டும்

34 day ago | Report abuse