Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
   
   
மனம் துடிக்கும்...
 

 

- தங்கராசா ஜீவராஜ்

நிலவு பிடிக்கும்
நிலவெறிக்கும் நாளில் வரும் – உன்
நினைவு பிடிக்கும்
நினைவுகளில் வந்தொலிக்கும்
கொலுசு பிடிக்கும்

கொலுசுகளைக் கூட்டிவரும்
பாதங்கள் நடந்துபோன
பாதைபிடிக்கும் - நீ
கடந்துபோன பின்னும் என்
சிந்தைவிட்டகலா உன்
சிரித்த முகம் பிடிக்கும்

காற்றுக் கலைத்துவிளையாடும்
காதோரக் கூந்தல் பிடிக்கும்
கதைகள் சொல்லி இடையில்
'கடி'க்கையில் சிவக்கும்
கன்னம் பிடிக்கும்

கவிதைசொன்ன வேளைகளில்-நீ
கண்ணிமைக்காதிருந்த
கணங்கள் பிடிக்கும்
திடீரெனக் கண்டதில்
சிந்தை தடுமாறிப்பின் நீ
சிரிக்க முன்சிரித்த
வளையல் பிடிக்கும்

கைகள் பேசிய
மொழி பிடிக்கும்
கண்கள் சொல்லிய
கவி பிடிக்கும்
தென்றல் திருடிவரும் உன்
மணம் பிடிக்கும்
திருமணம் முடித்திடுவென்று என்
மனம் துடிக்கும்.

 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)