Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
 
சென்னை வாசிகளே... பார்த்து போங்கப்பா..!
 

-கே.சீனிவாசன், சென்னை.

ரவு சுமார் 11:30 அளவில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்தேன். மீனம்பாக்கம் விமான நிலையம் தாண்டி பழவந்தாங்கல் சிக்னல் அருகே வண்டி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எங்கள் வண்டியை வெள்ளை மாருதி ஸ்விஃப்ட் ஒன்று ஓவர் டேக் செய்தது. வழக்கமாக இப்படி இன்னொரு வண்டி ஓவர் டேக் செய்யும் பொழுது என் வண்டியின் வேகத்தை கணிப்பேன். எங்கள் வண்டி 80 காட்டியது. அந்த கார் எப்படியும் 110-க்கு மேல்தான் சென்றிருக்க வேண்டும். எங்களை மட்டுமல்ல... முன்னால் சென்ற எல்லா வண்டியையும் ஓவர் டேக் செய்துகொண்டுதான் சென்றது.

எங்கள் வண்டிக்கு முன்னால் பாறைகளையும் ஜல்லிக்கற்களையும் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அதையும் ஓவர் டேக் செய்ய முயன்றது அந்த ஸ்விஃப்ட் கார். அப்போது இடதுபுறத்தில் இன்னொரு கார். இடையில் வெகு சில இடைவெளி மட்டுமே. 'இந்த நேரத்தில் ஓவர் டேக் செய்கிறானே, அந்த கார் சற்று வலப்புறம் வந்தாலும், அந்த லாரி சற்று இடப்புறம் வந்தாலோ என்ன ஆவது?" என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அதையும் தாண்டி அந்த இரு வண்டிகளுக்கு இடையில் புகுந்து ஒருவாறு சென்றுவிட்டது அந்த மாருதி ஸ்விஃப்ட்.

இந்த நேரத்தில் மாருதி ஸ்விஃப்ட் 100-லும், அதன் பின்னால் அந்த லாரி 80-லும் அந்த வண்டியின் பின் 5 - 8 மீட்டர் இடைவெளியில் 80-ல் எங்கள் வண்டியும் சென்று கொண்டிருந்தது. இப்பொடுது சரியாக பழவந்தாங்கல் சிக்னலில் சிகப்பு விழுந்தது. அந்த மாருதி ஸ்விஃப்ட் சிக்னல் அருகில் வரும்போது தான் சிகப்பு விழுந்தது. ஆனால் அவன் சிக்னலை கடந்து விட்டான். கடந்தவன் சென்றிருக்க வேண்டும். என்ன நினைத்தானோ... சடாரென்று ப்ரேக் அடிக்க வண்டி செம கன்ட்ரோல் போல, அப்படியே நின்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத லாரியின் ஓட்டுனர், மாருதி ஸ்விஃப்டின் மிக அருகில் சென்று அதன் மேல் மோதாமல் தவிர்க்க வண்டியை வ்லது பக்கமாக ஒடித்தார். அப்பொழுது சாலைக்கு நடுவில் 2 அடி உயர சுவர் மேல் வண்டியின் வலது பின்புறம் பயங்கர சத்தத்துடன் மோதியது.

இந்த மோதலில் வண்டி நிலை தடுமாறி வலது பக்கம் சாயத் தொடங்கியது. ஓட்டுனர் சுதாரித்து சடாரென்று இடது பக்கம் ஒடிக்க, ஷங்கர் படத்தில் வருவது போல தடாரென்று நிலைக்கு வந்தது. துணியை பிழிந்தால் எப்படி துணியின் முன் பக்கம் ஒரு பக்கமாகவும், பின் பக்கம் இன்னொரு பக்கமாகவும் முறுக்குமோ அப்படி இருந்தது லாரி. இந்த களேபரத்தில் அந்த மாருதி ஸ்விஃப்ட் ஒரு கீரல் கூட விழாமல் எஸ் ஆனது. லாரி கடைசியில் நிலைக்கு வந்து ஓரமாக நின்றது. எனக்கு பக்கத்தில் மற்றொரு காரில் வந்த வட மாநிலத்தவர் அந்த ஓட்டுனரை பார்த்து இந்தியில் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டிருந்தார். நான் மாருதி ஸ்விஃப்ட் செய்த தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு அவர், 'இவன் சிக்னலுக்கு நிறுத்தியிருக்க வேண்டும் இல்லையா?' என்று கேட்டார். நியாயம்தான்.

அப்புறம் தான் தெரிந்தது, லாரி சுவற்றில் மோதிய இடத்தில் சிக்னலுக்காக ஒருத்தர் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த சுவற்றை தாண்டி வலது புறம் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்தார். லாரி சுவற்றில் மோதிய இடத்தில் சில அங்குல இடைவெளியில் தான் அவர் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அவர் மட்டும் ஒரு அடி பின்னே நின்றிருந்தாலும் சட்னி தான்.

இங்கே தவறுகள்,

* இரவில் அந்த நேரத்தில் சிக்னல் தேவையா?

* சிக்னல் இருந்தாலும் இரவில் மதிக்கத் தேவையில்லை என்பது 'உண்மையான' சென்னைவாசிக்கு தெரியும். (ஸோ, மாருதி ஸ்விஃப்டும், லாரி ஓட்டுனரும் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என்பது புரிகிறது).

* மாருதி ஸ்விஃப்ட் 110-ல் சென்றது முதல் தவறு.

* சிக்னலை தாண்டியவன் அப்படியே போய் தொலைந்திருந்தால் பரவாயில்லை. தாண்டி சென்று சடாரென்று நிறுத்தியது பெருந்தவறு.

* பின்னால் வந்த லாரி ஓட்டுனர் சிக்னலை மதிக்காமல் செல்ல முற்பட்டது அடுத்த தவறு.

இதில் பாவப்பட்டவர் என்று பார்த்தால் அங்கு சிக்னலுக்காக நின்றிருந்தவர் தான். அவரும் வேறு ஏதாவது சிக்னல் ஜம்ப் செய்திருப்பார் என்பது வேறு விஷயம். ஆனால், அன்று அவர் உயிர் பிழைத்தது பெரிய அதிஷ்ர்டம்தான். தவறு செய்தவர்கள் அந்த மாருதி ஸ்விஃப்டும், லாரியும். ஆனால் அவர்கள் சேஃப். பிழைத்தவர் அதிர்ச்சியில் வண்டியை அப்படியே போட்டுவிட்டு பேந்த பேந்த விழித்துகொண்டிருந்தார். (அவரால் வேறு என்ன செய்ய முடியும்?). இவர் மட்டும் என்னவாம்.? கோட்டை தாண்டி அந்த சுவற்றுக்கு முன்னேதான் நின்று கொண்டிருந்தார். ஆனால் அப்படி நின்றதால்தான் அவர் பிழைத்தார். ஒரு வேளை ரூல்ஸ் பேசிக்கொண்டு கோட்டின் அருகிலேயே நின்றிருந்தால் சட்னிதான். இவையாவும் 15 முதல் 20 வினாடிகளுக்குள் நிகழ்ந்து முடிந்துவிட்டன. வேற என்ன சொல்றது... சென்னை வாசிகளே பார்த்துப் போங்கப்பா..!


 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
kishore
over speed is important that is main wrong speed is always unsafe condition act so normal speed is safe way

222 day ago | Report abuse

sampathkumarganesh
இதன் சாரம் என்னை வெகுவாக கவர்கிறது.இருபது நொடி தவறை அதன் வளைவு நெளிவுகளொடு மிக நுனுக்கமாக விவரிட்திருந்த அழகு..அருமை."என்ன சொல்ல்வதென்று தெரியவில்லை...வித்தியாசமா ஏதாவது சொல்லனுமே..!"

321 day ago | Report abuse

sreenivasan
With my 30 years driving experience in India and abraod one fundamental thing which I found is very important.In signal crossing..If you decide to cross the signal...just go ahead...never mind red appears when you are just about to cross or in the middle of the crossing...ennithuniga karumam..thuninthapin ennuvam enpathu izukku.

347 day ago | Report abuse

கோமதிநடராஜன்
தேவையான அறிவுரை.ஆனால் யார் கேட்கிறார்கள்.

350 day ago | Report abuse

jai
இரவில் சாலையில் செல்லும் பொலுது மிகவும் கவனம் ட்தெவை

352 day ago | Report abuse

RAM
பார்த்து வண்டி ஓட்டிட்டு போங்கப்பா....சுவர் இருந்தாதான் சித்திரம் எழுத முடியும்...

362 day ago | Report abuse

காயாம்பூ
பகலொ இரவோ... ட்ராஃபிக் சிக்னல் நம்ம நல்லதுக்குதான் இருக்கு... அதை மதிக்க வேண்டியது நமது கடமை... சென்னை வாசியொ வேறு ஊர் வாசியொ ட்ராஃபிக் சிக்னலை மதிச்சுத்தான் அகனும்.

368 day ago | Report abuse

Em
என்ன கன்றாவி லாஜிக்கோ, சென்னைவாசிகள்னா சிவப்பு விளக்குக்கு நிற்க வேண்டாமா? அந்த மாருதி ஸ்விஃப்டின் பதிவு எண்ணை, நியாமாக இவர் காவல்துறைக்கு தெரிவித்து இருக்க வேண்டும். இவரே 80 (அ) அதற்கும் மேல் சென்றுகொண்டிருந்தது வேறு கதை. கார்களுக்கு 45கி.மீ தான் அதிகபட்ச அனுமதிக்கபட்ட வேகம் என நினைக்கிறேன்.

369 day ago | Report abuse

Pal
Yellow signal need to be extented duration when the signal is at highway. Whenever you see the yellow light, hold the break slowly. if you feel, you are close to stopling, take the leg out of break and pass. This way the truck driver also should have avoided the accident. the Car should have break lock. This car need to have abs( Anti-brake locking system) which break the car smoothly.

372 day ago | Report abuse

A S
பகலோ அல்லது இரவோ, ரெட் சிக்னல் என்றால் நிற்கவேண்டியதுதான் சட்டம். இதில் சென்னைவாசியாக இருந்தால் என்ன, வெளியூர்வாசியென்றால் என்ன ? சாலை விதி மீறல்களுக்கு கடுமையான தண்டனைதான் இதுபோன்ற விதி மீறல்களை தடுக்கும். ஆனால் நம் போகுவரத்து போலீசார்தானே விதிகளை மீறுவோரை பிடிக்கவேண்டும். கையூட்டு என்ற விதி மீறலை யார் கண்டிப்பது ? இரவில் சிக்னல் விளக்கு தேவை இல்லையென்று யார் சொன்னது ? சந்திகளில் சிக்னல் இல்லாமல் எத்தனை விபத்துக்களைப்பார்த்திருக்கிறோம். ஆக வண்டி ஓடுனர்களுக்கு பொறுப்பு வந்தாலே பல விபத்துக்களை நாம் தவிர்க்கலாம். விபத்தில் ஈடுபடும் ஓடுனர்களின் உரிமங்களை புதுப்பிக்கும் முன் அவர்களை மீண்டும் ஓடுனர் பரீட்ச்சைக்கு அனுப்பவேண்டும். அதில் பாஸ் செய்தால் மட்டுமே மீண்டும் உரிமம் வழஙப்படவேண்டும்.

375 day ago | Report abuse

jinx
விகடன் என்ன சொல்லவருகிறது? டிராஃபிக் லைட்டை மதிக்க வேண்டாம் என்றா? அல்லது சட்டத்தை மீறினால் தான் உயிர் தப்ப முடியும் என்றா? ஏற்கனவே சென்னையில் எவனும் சட்டத்தை மதிக்க மாட்டான் நீங்கவேற இப்படி பொறுப்பு இல்லாமல் எழுதினா ராத்திரியில் மட்டும் இல்லை பகலிலும் டிரஃபிக் லைட்டுக்கு வண்டிய நிறுத்த மாட்டான்.

378 day ago | Report abuse

அனொ
அடபாவ்

389 day ago | Report abuse

christy
நல்லா இருக்கு!

397 day ago | Report abuse

Surya
என்ன தலவலி இது

465 day ago | Report abuse

ட்ராய்ஜன்
சிக்னலை மீறலாம், மீறாதவர்கள் சென்னை இல்லை என்று ஒரே உளறல்! சிக்னலை எந்த நேரத்திலும் மீறக்கூடாது, அதுதான் பாதுகப்பு என்று தெரிந்தவர்கள் யாருமே இல்லையா?

504 day ago | Report abuse

சுந்தர்
நல்லா விவரிச்சிருக்கிறீங்க!

523 day ago | Report abuse

umarhathab
சுதா அம்மனி, அப்போ ஆபீஸ்ல இருந்து வந்துக்கிட்டிருந்தேன். வீட்டில் இருந்தா சம்பளம் கொடுக்க மாட்டாங்களே!!! ^^சீனு^^ (அ) கே.சீனிவாசன்

523 day ago | Report abuse

முத்து
S. These are everyday happenings. Everyone should b wit awareness with traffic rules. Unless v cant do anything........

530 day ago | Report abuse

Senthil
Though it is everones repsonsibility to follow traffic rules, traffic police role is vital. Our traffic police good at coloecting money and sure would have collected money from both of them for violating rules.

537 day ago | Report abuse

போஸ்
muthlla srinivasan sir namma kadavullkku than thanks sollanum. Ivalavu thuram ellarum sattathai mirrunalum avar yarukkum oru kayam illamal parthu kondatharkku. aanal eppavum sattathai mirupavarkal kadavulidam vendumal thappikkalam. namma chennai vandivasikalitam irunthu thappika mudiyathu. take care Thank you sir

539 day ago | Report abuse

சுதா
why venture out on the road at that time of the day? Better to be at home safely

544 day ago | Report abuse